Saturday, July 4, 2026
No menu items!

K Dilakshan

எரிபொருளுக்கான வரியை நீக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்; விஜேசேகர…!

எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார். எரிபொருள் மீதான வரியை நீக்குவோம் என தற்போதைய அரசாங்கம் தேர்தல் பேரணிகளில் கூறியதை சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் எதிர்வரும் 30 ஆம் திகதி இரவுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும்...

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தேரர் உயிரிழப்பு…!

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தேரர் ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். வீரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரபெலெஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரிந்த  65 வயதுடைய தேரர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த தேரர் ...

புதிய சின்னத்தில் களமிறங்கும் திலித் ஜயவீர….!

பொதுத்தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடுவேன். பலமான அரசியல் கூட்டணியை தோற்றுவிப்பேன். சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எம்முடன் கைகோர்க்கலாம் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார். மவ்பிம ஜனதா கட்சியின் காரியாலயத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதித் தேர்தலில் கணிசமான அளவு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளேன். ...

புதிய ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நியமனம்….!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வெள்ளிக்கிழமை (27.09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டாரவிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான விஜேபண்டார, கொழும்பு பல்கலைக்கழகத்தில்...

தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்படும் புதிய முகங்கள்…!

நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை (24.09) நள்ளிரவுடன் பாராளுமன்றம்...

புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் ஜனாதிபதி….!

புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் மற்றும் பிரதமர் லோரன்ஸ் வோங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அனுர குமார திசாநாயக்க தேர்வானமை நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இலங்கை மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு என சிங்கப்பூர் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட...

கஜமுத்துக்களுடன் கைது செய்யப்பட்ட நபர் !

நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (27) விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 5 கஜமுத்துக்களுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். இந்த கஜமுத்துக்களின் பெறுமதி சுமார் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெலிஓயா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார். சந்தேக நபர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில்...

ஜனாதிபதியால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!

அரசியலமைப்பின் 44 ஆவது சரத்தின் உப சரத்து (1) இன் கீழ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்களின் பொறுப்பில் உள்ள விடயதானங்கள், செயல்பாடுகள், திணைக்களங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

கள்ளத்தொடர்பால் பலி போன உயிர்..!

வாரியபொல வல்பாலுவ பிரதேசத்தில் வீடொன்றில் புகுந்த திருடன் பிடிபட்டதாக 119 தகவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் சுந்தரகம, அவுலேகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் சந்தேகநபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தமை விசாரணையில்...

தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு..!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு மீண்டும் டிசம்பர் 12 திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி  தொடர்பான வழக்கு நேற்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img