K Dilakshan
Top
அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத வெள்ளம்: – 78 பேர் உயிரிழப்பு – மீட்புப்பணிகள் தீவிரம்!
அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாநிலத்தில் வெள்ளி கிழமையன்று ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தால் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், மேலும் 41 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கெர் கவுண்டியின் (Kerr County) கிராமப்புறப் பகுதியில் அமைந்துள்ள குவாடலூப் ஆற்றின் அருகே நடத்தப்பட்ட “கேம்ப் மிஸ்டிக்" (Camp Mystic) எனப்படும் ஒரு...
Technology
மர்மங்களை வெளிக்கொணரும் ‘பெனிகோ’: பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தொல்லியல் நகரம்!
பெருவின் வடக்குப் பகுதியில் உள்ள பரங்கா மாகாணத்தில் (Barranca) புதிய தொல்லியல் நகர மையம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர்கள் வெளியிட்ட ட்ரோன் காட்சிகளின் அடிப்படையில், இது ஒரு மலை மேட்டின் மீது அமைந்த சுற்றளவு வடிவ நகரமாக இருக்கின்றது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் (1,970 அடி) உயரத்தில் கட்டப்பட்ட கல் மற்றும் மண்...
உள்நாட்டுச்செய்திகள்
புஸ்ஸல்லா போமண்ட் தோட்டத்தில் குளவிக்கொட்டு: சிறுவர்கள் உட்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!
கண்டி – புஸ்ஸல்லாவையில் அமைந்துள்ள போமண்ட் தோட்டத்தில், சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பகுதியில், நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, வீடு திரும்பும் போதே, அவர்கள் இந்த அனர்த்தத்தை எதிர்கொள்ள நேர்ந்ததாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் அனைவரும், கம்பளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், 07...
Top
செம்மணி புதைகுழி அகழ்வில் மேலும் அதிர்ச்சி: அத்திவார குழியிலும் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!
யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழி வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வடிகால் அமைப்பை உருவாக்குவதற்காக அத்திவாரக் குழி நேற்று தோண்டப்பட்ட போதே, கூடுதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மழையுடனான காலநிலை காரணமாகவும், அகழ்வுப் பணிகளில் இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், வடிகால் கட்டமைப்புக்கான தொழில்திறனான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, அந்த இடத்தில் மனித...
Top
கொஸ்கமவில் துப்பாக்கிச் சூடு: 12 வயது சிறுமி உட்பட மூவர் காயம்!
கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் நேற்று (6) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 வயது சிறுமி உட்பட 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் பிஸ்டல் வகை ஆயுதத்தைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, பாதிக்கப்பட்டவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் அவிசாவளையைச் சேர்ந்த 30...
உள்நாட்டுச்செய்திகள்
முள்ளிவாய்க்கால் தேர்த்திருவிழாவில் தேரில் இருந்து வீழ்ந்த கலசம் – 55 வயது பெண் உயிரிழப்பு!
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள குருந்தையடி பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவின்போது, தேரில் பொருத்தப்பட்டிருந்த கலசம் வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் (வெள்ளி) கோலாகலமாக நடைபெற்ற இத்தேர்த்திருவிழாவின் போது தேரில் பொருத்தப்பட்டிருந்த கலசம் மின் இணைப்பு கம்பியில் சிக்கி கழன்று விழுந்ததால் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகின்றது.
அத்துடன் இதன்போது மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர்...
Technology
அமெரிக்கா – சீனா இடையே TikTok ஒப்பந்த பேச்சுவார்த்தை: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜூலை 4ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிரபலமான குறுந்தொடர் வீடியோ பயன்பாடு TikTok தொடர்பான ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளை ஜூலை 7 அல்லது 8ஆம் திகதி சீனாவுடன் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
"நாங்கள் இதற்கான ஒப்பந்தத்தை பெரும்பாலும் உறுதிசெய்துள்ளோம். சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை நேரடியாகவோ அல்லது அவரது பிரதிநிதிகளின் மூலமாகவோ...
World News
சிஎஸ்கேவின் சின்ன தல, தமிழ்த் திரையில் நாயகனாக மாறுகிறார்!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தமிழ் சினிமாவில் தன்னை ஒரு நடிகராக அறிமுகப்படுத்திக்கொள்ளப்போகின்றார் எனும் அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களால் மிஸ்டர் ஐபிஎல் (Mister IPL) மற்றும் சின்ன தல என அன்புடன் அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா ஆவார்.
இந்திய கிரிக்கெட்டுக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ள சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டிகளில்...
உலக அரசியல்
“கச்சத்தீவை ஒருபோதும் ஒப்படைக்கமாட்டோம்” – இந்திய அரசியல் முரண்பாடுகளை சுட்டிகாட்டும் விஜித ஹெராத்!
கச்சத்தீவை இந்தியாவுக்கு ஒப்படைக்கும் எண்ணமே இலங்கைக்கு இல்லையெனும் உறுதியான விடையை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் வழங்கியுள்ளார்.
இந்தியாவின் உள்நாட்டு அரசியல் முரண்பாடுகள் இந்த விவகாரத்தில் பிரதிபலிக்கின்றன என்றும், அதனை இலங்கை அரசியல் பிரச்சினையாக பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “இந்த பிரச்சினையை தீர்க்க இராஜதந்திர வழிகள்...
World News
உதிரக் காட்சியால் அதிர்ச்சியடைந்த வாராணாசி: திருமண அழுத்தம் மற்றும் பணக்கோரிக்கையால் மாணவி கொலை!
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி நகரில், 22 வயதுடைய மாணவி ஒருவர் தனது காதலனால் கொலை செய்யப்பட்டதாக இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
அறிவியல் முதுகலைப் பட்டப்படிப்பு (MSc) படித்து வந்த அல்கா பிந்த் எனும் மாணவியின் சடலம், வாராணாசியில் ரூபாபூர் பகுதியில் உள்ள விதான் பசேரா தாபா என்ற உணவகத்தின் ஒரு அறையில் திரை...
About Me
Latest News
வீட்டில் தீ வைப்பு; உயிரிழப்புக்கள் அதிகரிப்பு
மகரகமையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அந்த வீட்டின்...


