Monday, October 12, 2026
No menu items!

Nilu Niluja

அனைத்து பொறுப்புகளையும் துறக்கும் மாவை சேனாதிராசா…

இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளார். பதவியை துறந்தாலும் அவர் கட்சி உறுப்பினராக தொடர்ந்தும் பதவி வகிப்பாரென அறியமுடிகின்றது.

மின் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கைது…!

மீரிகம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள தொலைபேசி கோபுரத்தில் இருந்து மின் உபகரணங்களை திருடியதாக கூறப்படும் சந்தேக நபர்  ஒருவர் நேற்று (06.10) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீரிகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் பலி…!

கொழும்பு - வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 32 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த  சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்...

வீடுகளுக்குச் சென்று வரி வசூலிக்க திட்டம்….!

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுகளில், இதுவரை வரி செலுத்தாத நபர்களின் வீடுகளுக்குச் சென்று வரி வசூலிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் இன்று திங்கட்கிழமை(07) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 09 மாதங்களில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 1417 பில்லியன் ரூபாவை...

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி…!

கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கான நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் கிறிஸ்டிய ப்ரீலாண்ட் அறிவித்துள்ளார். கனடிய மக்களிடம் அறவீடு செய்யப்பட்ட வரித்தொகை இவ்வாறு மீள வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, பொருட்கள் சேவைகள் வரி மற்றும் விற்பனை வரி போன்றன இவ்வாறு மீள வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய மற்றும் குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் இந்த...

நவராத்திரியில் நீடிக்கும் இரண்டு ராஜயோகங்கள் …..!

கிரகங்களின் இளவரசன் புதன் கன்னி ராசியில் நுழைந்து பத்ர ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். அதேபோல் அசுரர்களின் குருவான சுக்கிரன் துலாம் ராசியில் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இப் பெரிய ராஜயோகங்கள் இரண்டும் நவராத்தியிலும் நீடித்திருப்பதால் சில ராசியினருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. கன்னி தன்னம்பிக்கை அதிகமாகும். முன்னேற்றம் ஏற்படும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். போட்டு வைத்த...

உழவு இயந்திரத்தில் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் பலி…!

உழவு இயந்திரத்தில் கனரக வாகனம் மோதியதில் சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார் மற்றைய நபர் காயம் அடைந்து நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மல்வத்தை பள்ளிவாசலுக்கு அருகாமையில் நேற்று சனிக்கிழமை (05.10) மாலை 04.15 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில்...

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது…!

புத்தளம் - தப்போவ பஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து ஒருதொகை வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் நேற்று (05.10) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படும் குறித்த சிகரட்டுகள் , விற்பனை செய்ய தயாராக இருந்த போது, சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூவர் கைது…!

தொல்பொருள் திணைக்களத்திற்கு உரித்தான வீலஉட பகுதியில் பழங்கால பொருட்களை பெறும் நோக்கில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தேகநபர்கள் 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நவ குறுந்துவத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்படி பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மூவரும் நீர்கொழும்பு மற்றும் மீதலாவ பிரதேசங்களைச் சேர்ந்த 29, 39 மற்றும்...

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு…!

1 கிலோ உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்கவும் நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 60 ரூபாவாகவும்,  பெரிய வெங்காயத்திற்கான வரி 10 ரூபாவில் இருந்து...

About Me

2372 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

“ஜெயிலர் 2” படத்துடன் மோதும் டிரான்ஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சித்தி இத்னானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய படம் 'டிரோன்ஸ்' . இதில் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம்,...
- Advertisement -spot_img