Thursday, October 15, 2026
No menu items!

Nilu Niluja

மதுபானசாலைக்கு எதிராக குரலெழுப்பிய பதியுதீன்….!

மன்னாரில் மதுபானசாலை அமைப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்து, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் இந்த விடயத்தை எடுத்துரைத்துள்ளார். அதில் அரசியல் ஆதாயத்திற்காக மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அது முன்னாள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதெனவும் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ACMC தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னார் பிரதான வீதியில் பாடசாலைகள், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும்...

மாற்றம் செய்யப்பட்டதா இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்கள்….?

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 செப்டெம்பர் 26ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும், துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பணவீக்கமானது, நடுத்தர காலத்தில் 5 சதவீதம்...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக டி.ஏ. ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார்.  பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னதாக செயற்பட்ட சாலிய விக்ரமசூரிய  பதவி விலகியிருந்ததுடன் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு நேற்று (26) அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய இரு வீதிகள் திறப்பு…!

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள பரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் கோட்டை ஜனாதிபதி மாவத்தை ஆகிய இரு வீதிகளை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காகத் திறக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவரின் அதிரடி அறிவிப்பு…..!

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாலிய விக்ரமசூரிய தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் மற்றும் டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் ஆகிய மூன்று நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். புதிய அமைச்சருக்கு தாம் விருப்பமான...

SJBக்கு புதிய தவிசாளர் நியமனம்…!

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) புதிய தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை ஐக்கிய மக்கள் கூட்டணியின் (SJS) பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனங்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன்- வட மாகாண ஆளுநர் கருத்து

– புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் – எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியும் ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநராக இன்று (27) தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு...

மதுபான அனுமதி பத்திரங்கள் பெற்றோர் விபரம் விரைவில் வெளியிடப்படும்…!

மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 03 கோடி ரூபா முதல் 04 கோடி ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தவர்களின் விபரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர்,அவர்களின் விபரங்கள் வௌியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை...

நாளை முதல் 65 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை…!

இரண்டு வருடங்களின் பின்னர், இடம்பெறும் பராமரிப்பு மற்றும் திருத்தப்பணிகள் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்திலிருந்து இன்று நள்ளிரவு முதல் முற்றாக நீர் வெளியேற்றப்படவுள்ளது.  இதன் காரணமாக அங்கிருந்து நீர் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு நாளை அதிகாலை ஒரு மணிமுதல் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 6 மணி வரை 65 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல்...

ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு அழைப்பு விடுவித்த  ஜனாதிபதி…!

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு அழைப்பு விடுத்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் ஆயுதம் தாங்கிய உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தமது...

About Me

2372 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சிற்றூழியர்களுக்கு பதிலாக இராணுவம்; அதிரடி காட்டும் அரசாங்கம்

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து அத்தியாவசிய சுகாதார சேவைகள் தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்காக இலங்கை இராணுவத்தினர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின்...
- Advertisement -spot_img