Tuesday, October 13, 2026
No menu items!

Nilu Niluja

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் சாத்தியம்….!

சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச தரப்புகள் இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் அல்லது அதற்குக் குறைவாகக் காணப்படும் எனக் கணிப்பிட்டிருந்தாலும் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்தை விடவும் அதிகமாகப் பதிவாகும் எனத் தங்களது தரப்பு மதிப்பிட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  நாணய கொள்கை மீளாய்வு தொடர்பில்...

பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை…!

இளையோருக்கு இடமளித்து இந்தமுறை பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லையெனத் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  அறிக்கையொன்றினை விடுத்து இதனைத் தெரிவித்துள்ள அவர் தமது அரசியல் சேவை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அரசியல் அனுபவங்கள் உள்ளவர்களையும், இளைஞர்களையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களுக்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். கட்சியில் உள்ள இளைஞர்களுக்கு வழிவிட்டு அரசியலில் முதிர்ச்சி...

புதிய பதில் காவல்துறை மா அதிபர் நியமனம்…!

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய இலங்கை காவல்துறையின் பதில் காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கு முன்னர் காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னகோன், அந்தப் பதவியின் கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்டதையடுத்து, காவல்துறை மா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது. இந்நிலையிலேயே சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த...

புதிய அரசாங்கத்தின் இடைக்கால பாதீடு நவம்பரில் முன்வைப்பு…!

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையால் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான இடைக்கால பாதீட்டினை புதிய நாடாளுமன்றம் கூடவுள்ள எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கொண்டு வருவதற்கு புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ   தெரிவித்துள்ளார். அதேநேரம், 2025ஆம் ஆண்டுக்கான முழுமையான பாதீடு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முன்வைக்கப்பட்டு...

பல்கலைக்கழகங்களில் பகிடிவதைச் சம்பவங்களுக்கு தடை….

இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை இல்லாதொழிக்க சட்டமா அதிபர் தொடர் வழிகாட்டுதல்களை தயாரித்துள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய  உச்ச நீதிமன்ற அமர்விலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவியினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை...

நீடிக்கப்பட்ட கால அவகாசம்….!

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை தமது பதவிக்காலத்தில் ஆக்கிரமித்துள்ள முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக அந்த இடத்தை காலி செய்து அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு முன்னாள் அமைச்சர்களுக்கு எழுத்து மூலம் நேற்று அறிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு கிட்டத்தட்ட 50 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், மடிவெல...

திருப்பி அனுப்பப்பட்ட அரச வாகனங்களை ஏலம் விடுமாறு வலியுறுத்தல்…!

புதிய அரசாங்கம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ள அரச வாகனங்களை ஏலத்தில் வைத்து, அதனை காட்சிப் பொருளாக மாற்றி பொதுமக்களை ஏமாற்றுவதை விடுத்து, திறைசேரிக்கு பணத்தை பயன்படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த பொது வாகன தரிப்பிடத்தில் வைக்கப்பட்டுள்ள டஜன் கணக்கான அரச வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள்...

நிலந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்…!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தில் நஷ்டஈட்டுத் தொகையான 75 மில்லியன் ரூபாவை முழுமையாக செலுத்தாதமையால் நிலந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் அதிபர் இன்று (27) உயர் நீதிமன்றத்திற்கு...

தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இந்திய எம்.பி ஜனாதிபதி அனுரவிடம் கோரிக்கை!

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களைப் புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனக்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி விடுவிக்க வேண்டும் என இந்தியாவின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அனைத்து மீனவர்களையும், பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள அவர்களின் அனைத்து படகுகளையும் நல்லெண்ண மற்றும்...

தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்கள் மீள் ஆரம்பம்…!

இலங்கையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்களின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் உறுதியளித்துள்ளதுடன், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது .

About Me

2372 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சிராந்தியின் உடல் நிலை குறித்து விளக்கம் கோரும் நீதிமன்றம்

'சிரிலிய சவிய' கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு...
- Advertisement -spot_img