Friday, October 16, 2026
No menu items!

Nilu Niluja

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் மாணவர்களின் பெற்றோர்கள்…!

இம்முறை இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பிரச்சினை தொடர்பில் ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.  பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் மனநலம் கருதி இந்த புலமைப்பரிசில் பரீட்சை...

ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை….!

அரசாங்க வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான பல வாகனங்கள், காலி முகத்திடலுக்கு அருகில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்தினூடாக பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 97 அரச வாகனங்கள், ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக...

துறைமுக நகரில் முதலீட்டு வாய்ப்பு இலங்கை கிளையுடன் உடன்படிக்கை..!

கொழும்பு துறைமுக நகரில் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில், சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் இலங்கைக் கிளை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. உள்ளூர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கான முக்கிய முதலீட்டு மத்திய நிலையமாக கொழும்பு துறைமுக நகரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் இலங்கைக் கிளை துறைமுக நகரத் திட்டத்துடன் இந்த...

திலீத்துடன் இணைந்த திலும் அமுனுகம…!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, திலீப் ஜயவீர தலைமையிலான ‘தாய்நாடு மக்கள் கட்சியின்’ தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம்(27)  அவருக்கான நியமனக் கடிதத்தை அந்த கட்சியின் தலைவர் திலீப் ஜயவீர கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து கையளித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அந்த கட்சியின் தலைவர், தமது கட்சி முக்கியமான திருப்புமுனையை சந்தித்துள்ளதாக...

உத்தியோகபூர்வ குடியிருப்புகளைத் திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு…!

முன்னாள் அமைச்சர்கள் தாம் பயன்படுத்தி வந்த உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. இந்த தேவை குறித்து முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அரசியல்வாதிகளை பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைக்கத் தடை…!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானமை தொடர்பில் சுயாதீன விசேட நிபுணர்களின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.  கல்வி அமைச்சின் சகல பிரிவு பிரதானிகளுடனும் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். வினாத்தாள் வெளியானதன் காரணமாக மாணவர்களுக்கு...

இலங்கையின் புதிய தலைமைத்துவத்தில்  நம்பிக்கை கொண்டுள்ள உலக வங்கி குழு….!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு உலக வங்கி குழு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் ரிக்கார்டோ புலிட்டி ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில், இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர். இலங்கையின்...

2023 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு….!

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடத்தப்பட்டதுடன், மொத்தம் 452,979...

பழைய முறைப்படி ஆரம்பமாகும் வீசா வழங்கும் நடைமுறை….!

சர்ச்சைக்குரிய வி.எஃப்.எஸ் வீசா முறைமைக்குப் பதிலாக நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பழைய முறைமைக்கு விசா வழங்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் முறைமை ஊடாக வீசா வழங்கும் நடைமுறைக்குப் பல தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். விமான நிலையத்திற்கு வருகைதரும் போது வழங்கப்படும் நுழைவு அனுமதியானது கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு...

பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்….!

அனைத்து மாவட்ட காரியாலயங்களிலும் உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் உள்ளிட்ட சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் நாளைய தினம் (28) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், கடந்த தேர்தலின்...

About Me

2372 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மஹிந்தவின் உடல்நிலை குறித்து அவரது கட்சி தகவல் 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை குறித்து சட்டத்தரணி மனோஜ் கமகே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததுடன், முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச சம்பந்தப்பட்ட சட்ட...
- Advertisement -spot_img