Monday, May 25, 2026
No menu items!

Tamil Vani

எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் சச்சின் டெண்டுல்கரின் புதிய புகைப்படம்..!!

உலகப் புகழ் பெற்ற லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்திலுள்ள எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் சச்சின் டெண்டுல்கரின் புதிய புகைப்படம் ஒன்று நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் கிரிக்கெட்டில் சாதனைப் படைக்கும் வீரர்கள் பெயர், பெயர்ப் பலகையில் பொறிக்கப்படும். அத்தோடு, கிரிக்கெட் சாதனைப் படைத்தவர்கள் படங்கள் இங்கு இடம் பெற்றிருக்கும். இந்த வகையில் சச்சின் டெண்டுல்கரின்...

இஸ்ரேல், காசா மீது மீண்டும் போர் நடத்தும் – பெஞ்சமின் நெதன்யாகு!!

60 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இஸ்ரேல், காசா மீது மீண்டும் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாகப் போர் இடம்பெற்று வருகிறது. இந்தநிலையில், ஹமாஸ் உடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்...

காவல்துறை அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல்..!!

சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. டுபாயில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களினால் இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த சிரேஸ்ட அதிகாரிகள், பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் சென்ற 9 பயணிகள் சுட்டுக் கொலை -பாகிஸ்தான்!!

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பேருந்தில் சென்ற 9 பயணிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள், பயணிகளை இறக்கி சோதனை செய்தபிறகு  9 பேரை சுட்டுக் கொன்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

65 வயது பாட்டிக்கு பாலியல் வன்கொடுமை..!!

இந்தியா, இமாச்சலப் பிரதேசத்தில் 65 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது பேரன் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கணவர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்த மூதாட்டியை கடந்த   ஜூலை 3 ஆம் திகதி மதியம், அவரது பேரன் வீட்டிற்கு வந்து  பாலியல் வன்கொடுமை செய்து, இந்த சம்பவம்...

இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – கனடா!!

கனடாவில் விமானப் பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனிடோபா (Manitoba) - ஸ்டெயின்பாக் (Steinbach) பகுதியில், விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்றில், குறித்த இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வின்னிபெக்கில் (Winnipeg) இருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில்,...

மீண்டும் அதிகாரபூர்வ கடிதத்தை வெளியிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்..!!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கான, தனது அதிகாரபூர்வ கடிதத்தை மீண்டும் வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை ஜனாதிபதி அனுரவின் பெயரை "அருண" என்று தவறாக ஆரம்பக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தமை, இந்த கடிதத்தில் திருத்தப்பட்டுள்ளது. 2025, ஜூலை 9, திகதியிட்ட திருத்தப்பட்ட கடிதம், ஆகஸ்ட் 1 முதல், இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி...

அமெரிக்கா செல்ல இருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்க அரசு விசா நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், விசா கட்டணத்தையும் இரண்டரை மடங்கு அளவுக்கு உயர்த்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து விசா வழங்குவதில் பல நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில், 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் அரசு செலவீனம் தொடர்பான மசோதா சமீபத்தில் நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதி...

முன்னரே விற்றுத் தீர்ந்த இலங்கை-பங்களாதேஷ் முதல் T20 போட்டிக்கான டிக்கெட்டுகள்..!

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இன்று (10) நடைபெறவிருக்கும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, டிக்கெட் விற்பனை நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், விற்பனைக்கு இனி டிக்கெட்டுகள் எதுவும் இல்லை என்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. டிக்கெட்...

ஹட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த சிறுவனின் சடலம் மீட்பு..!!

ஹட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது சிறுவன் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக   ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  ‌ செவ்வாய்க்கிழமை (08) அன்று மாலை  நண்பர்களுடன் சிங்கமலை குளம் பகுதிக்கு  புகைப்படம் எடுக்க சென்ற போது தவறி விழுந்து காணாமல் போயுள்ளார் கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக...

About Me

663 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

வேலைவாய்ப்பு மோசடி; ஒரு வருடத்துக்குள் பணத்தை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்துமாறு ரெயின்போ மேன்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவன உரிமையாளருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம்...
- Advertisement -spot_img