Thursday, July 2, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என தீர்ப்பு!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது. 2006-ஆம் ஆண்டில் அபிவிருத்தி லொட்டரி சபையின் தலைவராக குணவர்தன பதவி வகித்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் தொடர்பான வழக்குகளில் இந்தத் தீர்ப்பை உயர்...

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண் ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அமெரிக்க டொலர் போன்ற போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டதாக கூறப்படும் ஒரு நடவடிக்கை குறித்த விசாரணையைத்...

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான வாகனங்கள் விற்கப்படாமல் காணப்படுகிற போதும், எதிர்பார்த்த அளவு வாகன இறக்குமதிகள் குறையவில்லை என்றும், அரச வருவாயில் எந்தவொரு நிதி தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார். சுங்கத்துறையின் வருமானத்தில் வாகன...

கடல் கொந்தளிப்பு குறித்து சிவப்பு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல்கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கடற்படை மற்றும் மீன்பிடித் தொழிலாளர்கள் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது. குறித்த எச்சரிக்கை ஜூன் 9 ஆம் திகதி காலை 10.30 மணி வரை விடுக்கப்பட்டுள்ளதுடன் அபாயகரமான கடல் கொந்தளிப்பு நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக கல்பிட்டிய...

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக எதிரணியினர் போராட்டம்!

முன்னாள் அரச புலனாய்வு பிரிவு தலைவர் சுரேஷ் சாலே, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக தெரிவித்து, எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாகிரக போராட்டம் இன்று (08) கொழும்பு கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் தொடங்கியுள்ளது. இதில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சாலே, ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான...

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் சகலவற்றிலும் கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (08), அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு சற்றே அதிகரித்துள்ளது. டொலரின் விற்பனை விகிதம் சில வங்கிகளில் ரூ. 340-எனும் நிலையான விலையில் காணப்படுகிறது. செலான் வங்கியின் அறிக்கைக்கமைய,அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் ரூ. 330.25 ஆகவும்,விற்பனை விகிதம் ரூ. 341 ஆகவும்...

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மீட்பு!

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள், ஒருங்கிணைந்த காவல்துறை நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஃபைடல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த மூவரையும் கடத்தி, 90,000 அமெரிக்க டொலர் பிணைத்தொகை கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இரண்டு எத்தியோப்பியர்கள் மற்றும் நான்கு பாகிஸ்தானியர்கள் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள், வேலை வாய்ப்புகளுக்காக மே 23...

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரம்பகந்தவைச் சேர்ந்த 49 வயதான குறித்த நபர், தம்பதியரின் இல்லத்திற்குள் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்தத் தாக்குதல்...

விருந்தில் கலந்து கொண்டோர் போதை பொருட்களுடன் கைது!

காலி,அம்பலங்கொட,பொன்னடுவ பகுதியில் சமூக ஊடகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு விருந்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ​​மூன்று பெண்கள் உட்பட 28 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சோதனையை அம்பலங்கொட பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இணைந்து நடத்தியுள்ளனர். இதன்போது,225 மில்லிகிராம் கொக்கைன், 8.125 கிராம் ஐஸ், 2.4 கிராம் கஞ்சா மற்றும் சட்டவிரோத...

அமேசான் கல்லூரிக்கு மேலும் ஒரு அரச அங்கீகாரம்

ஆரம்பக் குழந்தைப் பருவக் கல்வித் துறையில் முன்னணி கல்வி நிறுவனமாக விளங்கும் அமேசன் கல்லூரிக்கு முன்பள்ளி டிப்ளோமா பாடநெறிக்கான (Pre School Diploma) அரச அங்கீகாரத்தினை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு வழங்கியுள்ளது. இந்த அங்கீகாரத்துக்கான ஆவணங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சில் அமைச்சர் போல்...
- Advertisement -

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...