Tuesday, July 14, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

லொஹான் ரத்வத்தவிற்கு விசேட பாதுகாப்பு..!

சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருப்பதால் நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

விகாரையில் திருட்டு…!

திவுலப்பிட்டி-ஹபுவலான விகாரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விகாரையில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த இரு சந்தேக நபர்களும் இன்று (02.11.2024) அதிகாலை வந்து விகாரையில் தங்கியிருந்த விஹாராதிபதியை கட்டி வைத்துவிட்டு பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 5 இலட்சம் ரூபா திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலபிட்டிய...

நாகை – இலங்கை இடையே சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும்..!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இனி வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி  நாகை - இலங்கை இடையே சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது. முதலில் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் முன்பதிவு குறைவாக...

வியாழேந்திரன் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க எடுத்த முடிவை வரவேற்கின்றோம்; இரா. துரைரெட்ணம்…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தமிழர்களுடைய பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக சங்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறு அறைகூவல் விடுத்து தமிழரிடம் ஒற்றுமையை வலுப்பெற வைப்பதற்காக அவர் எடுத்த முடிவை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கின்றோம். எனவே எதிர்காலத்தில் வலுவான தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் தமிழ் தேசிய பிரச்சினை அபிவிருத்தி போன்ற விடயங்களை பெற பேரம் பேசும் சக்தியாக...

அறுகம்பே பயங்கரவாத தாக்குதல் திட்டம்- மேலும் பலர் கைது..!

அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைதாகியுள்ளனர். அந்த வகையில், மாலைதீவு பிரஜை உட்பட 06 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கில் வீதிகளையும், காணிகளையும் விடுவிக்க வேண்டும்; தர்மலிங்கம் சித்தார்த்தன்…!

தென் பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமான எஃப்ரேல் நிறுவனத்துக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று, சித்தார்த்தன் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. இதில் 13வது சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது சித்தார்த்தன் அவர்கள் தமது நிலைப்பாடு குறித்து...

நீர் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு வலையில் இருந்து சடலம் மீட்பு..!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தண்ணீர் தாங்கிக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் நீர் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு வலையில் இருந்து, இன்று (2) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு உள்ளது. இந்த சடலம், காசல்ரி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் அமைப்பின் ஊடாக இழுத்துச் செல்லப்பட்டு, பாதுகாப்பு வலையில் சிக்குண்டு இருக்கலாம்...

பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்கவின் கோரிக்கை..!

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்பது தொடர்பில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இது தொடர்பான முக்கிய தகவலை கூறியுள்ளார். அதாவது, எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வ தேர்தல் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறவில்லையென்றால் அருகில் உள்ள தபால்...

இந்தியாவுக்கான இராஜதந்திர பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்…!

இந்தியாவுக்கான இலங்கை ஆணையாளர் சந்தூஷ் ஜா மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் குழு இன்று பேலியகொடவில் உள்ள பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் தலைமையகத்திற்கு வருகைதந்திருந்தனர். இதன்போது, பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் பணிப்பாளர் மிலிந்த மொரகொடவைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். பாத்ஃபைண்டர் தலைமையகத்தில் நிறுவப்பட்ட இந்திய இலங்கை ஆய்வு மையத்தின் செயல்பாடுகளை தூதுக்குழு இதன்போது அவதானித்தது. பாத்ஃபைண்டர் அறக்கட்டளை இந்திய அரசியல் அமைப்புகள், புலனாய்வு...

ஜனாதிபதிக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையே சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh Jha) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய சவால்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை...
- Advertisement -

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...