Tuesday, July 14, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

யாழில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் 07 வருடங்களின் பின் கைது..!

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி கோடிக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்ட நபர் 07 வருடங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வருவதாக வெளியுலகுக்கு நம்ப வைத்துக்கொண்டு , இரவு வேளைகளில் மனைவி பிள்ளைகளை சந்திக்கச் சென்ற நிலையில்...

கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோமென புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவிப்பு..!

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் இல்லாவிடில்  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோமென புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தமது தொழிற்சங்க நடவடிக்கையின் போராட்டத்தால் பயணிகளுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (02)...

தமிழரசுக்கட்சியினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் திருத்தம்..!

தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் திருத்தமொன்றைச் செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக குறித்த விஞ்ஞாபனத்தை மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. அதன் போது அங்கு பிரசன்னமாகியிருந்த சிவஞானம் சிறிதரன் விஞ்ஞாபனத்தின் ஐந்தாவது பிரிவில் காணப்படுகின்ற தவறைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து விஞ்ஞாபன வரைவில் பங்கேற்ற சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அதனை மீளத் திருத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில்...

நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லமடு பிரதேசத்தில் நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அடம்பன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளகாக தெரிவிக்கப்படுகிறது.. மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்னார் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு...

கன்னி வரவு – செலவு திட்டம் மார்ச் மாதத்தில் சமர்பிக்க தீர்மானம்..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கன்னி வரவு - செலவு திட்டம் மார்ச் மாதத்தில் சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வொஷிங்கடன் பேச்சுவார்த்தைகளின் பின்னர், மேலதிக உறுதிப்பாடுகளுக்காக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த பின்னர் உயர் மட்ட குழுவை கொழும்புக்கு அனுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், மூன்றாவது நீட்டிக்கப்பட்ட கடன் வசதி அடுத்த வருடத்திலேயே இலங்கைக்கு கிடைக்கப்பெறும். சர்வதேச...

இன்றைய நாளுக்கான வானிலை…!

நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வகையில் வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல் மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள்...

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கஞ்சா..!

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கஞ்சாவை என்.சி போதைப்பொருளில் கலந்து விற்பனை செய்த பெண்ணொருவர் (56) கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். சுகாதார அமைச்சினால் தடைசெய்யப்பட்ட என்.சி போதைப்பொருளை சிறிய பொதிகளில் அடைத்து இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சந்தேக...

பொலிஸ் பரிசோதகர் கைது..!

பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ரீ-56 துப்பாக்கியுடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தத் திணைக்களத்தின் கொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் அதிகாரிகளினால் அளுத்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர், தற்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான கணேமுல்ல...

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட வைத்தியர்கள்..!

காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை வைத்தியர்கள் கைவிட்டுள்ளனர். வைத்தியசாலையின் பல வைத்தியர்களுக்கு வைத்தியரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தற்போது கைவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிப்புறக்கணிப்பு சம்பவத்தையடுத்து சம்பந்தப்பட்ட வைத்தியர் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் அளித்த வாக்குறுதியின் பேரில் இந்தப் பணிப்புறக்கணிப்பு...

தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு…!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா அவர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர்.ப.சத்தியலிங்கம் அவர்களிடம் தேர்தல் விஞ்ஞாபனத்தை கையளித்து, உத்தியோகபூர்வமாக அதனை வெளியீடு செய்து வைத்தார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சித் தலைவரது இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்களான...
- Advertisement -

Latest News

அதர்வாவின் வெற்றி படமாக மாறும் ‘இதயம் முரளி’

அதர்வாவின் "இதயம் முரளி" திரைப்படம் வெளியாகுவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது 'இதயம் முரளி' படம் 3 நாட்களில் உலகளவில் இந்திய...