Friday, July 10, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இன்னி சை விருந்தும், உதவி வழங்கலும்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு  பேரவையின் ஏற்பாட்டில், பிரதி வெள்ளிக்கிழமைகளில் இடம் பெறும் வாராந்த நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இன்று காலை 10:45 மணியளவில் ஆச்சிரம மண்டபத்தில் இடம் பெற்றது. பஞ்சபுராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில் கலாவித்தகர் குணராசா நக்கீரன் அவர்களின்  குழலும், ...

விடுமுறை நாட்களிலும் பஸ் பருவச் சீட்டை பயன்படுத்த நடவடிக்கை…!

சனி, ஞாயிறு மற்றும் ஏனைய அனைத்து விடுமுறை நாட்களிலும் பாடசாலை மாணவர்கள், தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மாதாந்த பருவச் சீட்டைப் பயன்படுத்தி பஸ்களில் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் போக்குவரத்து சபைத் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விடுமுறை நாட்களில் மாணவர்கள் மேற்கொள்கின்ற போக்குவரத்தின் போது பெரும் அசௌகரியங்களை...

ஆணொருவரின் சடலம் மீட்பு…!

புத்தளம், பல்லம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆடிகம -  ரஸ்நாயக்கபுர வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் இவர்  5 அடி 6 அங்குலம் உயரமுடையவர்...

வெள்ள அபாய எச்சரிக்கை…!

நிலவி வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை எட்டியுள்ளதாக, கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் அஜித் நிஷாந்த தெரிவித்துள்ளார். நேற்று (11.10) இரவு 9 மணி நிலவரப்படி, நீர்மானியின் நீர்மட்டம் 5.54 மீற்றராக காணப்படுவதாகவும், இதனால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் பிரதிப்...

பிரதமரின் புகைப்படங்களை பயன்படுத்துவது தொடர்பில் அறிவிப்பு…!

அரச நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்துவதற்கு எழுத்துப்பூர்வ முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, இது தொடர்பில் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் பார்வைக்கு இணங்க, பொது நிதியை உகந்த முறையில் பயன்படுத்துவதற்காகவே, இந்த...

பாராளுமன்றத் தேர்தலில் 10,000 வேட்பாளர்கள் போட்டி…!

பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சுமார் 10,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக 764 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ள நிலையில், அதில் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி,...

அரசாங்க வீடுகளை 11 பேர் மாத்திரமே மீள கையளிப்பு…!

கடந்த அரசாங்கத்தில், அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரசாங்க வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே வீடுகளை கையளித்துள்ளதாக, பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. பொருட்கள், உடைமைகளை எடுத்துக்கொள்வது போன்ற பல சம்பிரதாயங்களை முடிக்க வேண்டியிருப்பதால், வீடுகளை கையளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த அரசாங்கங்கள் அமைச்சர்களின் பாவனைக்காக கொழும்பு நகரில் வீடுகளை ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர்களை கொள்வனவு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் – ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு!

தென்னிலங்கை வேட்பாளர்கள் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தாலும் கூட, தென் இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு மாயை தோற்றம், மாயை அலையாக இங்கே உருவெடுத்து இருக்கின்ற நிலையில் அதன் பாதகங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அதற்காகத்தான் நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம்...

அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை உன்னிப்பாக அவதானித்து வரும் வெளிநாட்டுத் தூதரகங்கள்…!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிந்தது. அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்றுமா, இந்தியாவுக்கு ஆதரவான கொள்கையை பின்பற்றுமா அல்லது அமெரிக்க சார்பு நிலைப்பாட்டில் இயங்குமா என்பதை இவ்வாறு தூதரகங்கள் அவதானித்து வருகின்றன. ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம்...

அனைத்து கட்சிகளும் ஓர் அணியில் திரள வேண்டும் என்பதே எமது நோக்கம் – கே.வி.தவராசா தெரிவிப்பு!

2009க்கு பின்னர் தமிழ் தேசியம் சார்ந்த காட்சிகள் பிளவுபட்டு காணப்படுகின்றது. இந்நிலையில் நாங்கள் அனைவரும் இணைந்து தமிழ் தேசியத்தின் வளர்ச்சிக்காக ஒருமித்த குரலாக செயல்பட வேண்டும் என்ற காரணத்திற்காக நாங்கள் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளோம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார். இன்றையதினம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு...
- Advertisement -

Latest News

பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்ட பணமோசடி தடுப்பு சட்டமூலம்

திருத்தப்பட்ட பணமோசடி தடுப்பு  சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகள் கிடைத்துள்ளன. எதிராக...