Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

25 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி….!

மஹியங்கனை பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இரவு வேளையில் பணிபுரிந்த சுமார் 25 பெண் தொழிலாளர்கள் அவசர ஒவ்வாமை காரணமாக மஹியங்கனை அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை கெமுனுபுர ஆடை மண்டபத்தில் பணிபுரியும் பணிப்பெண்கள் குழுவொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் ஏற்பட்ட பிரச்சினையே இந்த ஒவ்வாமைக்கான காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

கோட்டபாய ராஜபக்ஷவின் மோசமான ஆட்சியில் நாடு பாதிக்கப்பட்டது – ரிஷாட் பதியுதீன்…!

கோட்டபாய ராஜபக்ஷவின் மோசமான ஆட்சியின் போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இந்த நாடும் மாவட்டமும் பாதிக்கப்பட்டது. குறித்த நாட்டை முழுமையாக மீட்டெடுக்கவும்,மன்னார் மாவட்ட மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் மக்கள் தகுதியான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்ட சஜித்…!

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச இன்று சனிக்கிழமை (31.08) காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார். சஜித் பிரேமதாச இன்றையதினம் மற்றும்  நாளை ஞாயிற்றுக்கிழமை (01.08) ஆகிய இரு நாட்களும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து பல்வேறு தரப்பினருடனும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட குருளைச் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு…

நேற்றைய தினம் முதன்முறையாக யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் குருளைச்சாரணர் களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஜனாப் N.ஷாபி அவர்களின் தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் யாழ் மாவட்ட  சாரணர் ஆணையாளருமான  உயர்திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சின்னத்தை சூட்டி...

அரசாங்க வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்துகள் இல்லை; ரமேஷ் பத்திரன…!

அரசாங்க வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்துகள் இல்லை என்பதை பொறுப்புடன் உறுதிப்படுத்துவதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இங்கு மேலும் அவர் தெரிவித்தாவது, அரசாங்கத்தின் ஊடாக தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு எவ்வித வழிமுறைகளும் இல்லை....

மின்சார கட்டணம் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்படும்; அனுரகுமார திஸாநாயக்க…!

தனது நிர்வாகத்தின் கீழ் மின்சார கட்டணம் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கல்கிசையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்கள் ஒடுக்கப்பட்டால் நாட்டைக் கட்டியெழுப்புவதில் எந்தப் பயனும் இல்லை, நாட்டை படிப்படியாக அபிவிருத்தி செய்கிறோம், முதலில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம்...

ராஜித சேனாரத்னவின் கருத்துக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு…!

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் கருத்துக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட சேனாரத்ன, வெளிநாட்டு ஊழியர்களை வாக்களிக்க இலங்கைக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் வலையொளிக்கு அச்சுறுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தேசிய மக்கள் சக்தி அரசியல் சபை...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவித்தல்…!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவியை இராஜிநாமா செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கௌசல்ய நவரட்னவை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (31.08) ஏகமனதாக அழைப்பு விடுத்துள்ளது.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளர்கள் கைது…!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான “சேதவத்தை கசுன்” என்பவரின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கிராண்ட்பாஸ், சேதவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 04 தோட்டாக்கள் மற்றும் 21...

சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது…!

கம்பஹா, பல்லேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுராகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன், இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்லேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுராகொட பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 101...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...