Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

நல்லைக் கந்தன் உற்சப காலத்தில் சூழல்நேயப்பணி..!

மத்தியசுற்றாடல் அதிகாரசாபையினர் சமூகத்தில் சுற்றாடல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக நல்லைக்கந்தன் உற்சவகாலத்தில் பல்வேறு செயற்பாடுகளை பாடசாலை சுற்றாடல் கழகங்களின் உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர். இதன் போது பருத்தித்துறை வீதியில் மாநகரசபை சித்தமருத்துவமனையை அண்டியபகுதியில் சுற்றாடல் விழிப்புணர்வு முகாம் அமைக்கப்பட்டு ஆலயதரிசனத்திற்காக வருபவர்களிற்கு சுற்றாடல் விழிப்பணர்வுப் பிரச்சாரம் செய்வதோடு, பாடசாலை மாணவரிடம் சுற்றாடல் நேய வினாக்கள் வினாவப்பட்டு...

யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024″ எனும் வர்த்தக கண்காட்சி..!

யாழ்ப்பாணத் தொழில் துறைகளை பிரபல்யப்படுத்தி மேம்படுத்தும் நோக்குடன், "யாழ்ப்பாணம் எக்ஸ்போ 2024" எனும் வர்த்தக கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்த கண்காட்சி இன்று 24 மற்றும் நாளை  25ஆம் திகதி வரையில் நடைபெற உள்ளது. இக் கண்காட்சியினை முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும். என...

A9 வீதி கிளிநொச்சி இயக்கச்சி சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..! 

கிளிநொச்சி இயக்கச்சி A9 வீதி சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட பேருந்து வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீது இரவு 10.30 மணியளவில்  மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது . நடந்து சென்ற நபர் மதுபோதையில் வீதியின் நடுவே நின்று பேருந்தை மறித்தபோது பேருந்தின் நடத்துநர் மறித்தவரை வீதியை...

கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்..!

சுமந்திரன், சாணக்கியன், சிவஞானம் போன்ற சிலரே பொது வேட்பாளரை எதிர்க்கின்றனர். அவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் பொது வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிக்கையில், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழரசுக்கட்சியில் மிகப் பெரும்பாலானவர்கள்...

சங்கு கட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்..!

கிளிநொச்சியில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து சங்குடன்  நேற்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தாயகச் செயலணி என்ற அமைப்பின் ஏற்பாட்டில்  தமிழரசுக் கட்சின்  ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலர் இணைந்து குறித்த பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தனர். நிகழ்வின் முன்னதாக கிளிநொச்சி  கந்த சுவாமி ஆலயத்தில் பூசை வழிபாடுகளைத்...

இன்றைய நாளுக்கான வானிலை….

சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடும் என சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறியுள்ளார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின்  சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன்...

வவுனியாவில் புதையல் தோண்ட முற்பட்டவர் கைது….!

வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (20.08) அதிகாலை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது அவரிடம் இருந்து புதையலை கண்டறிவதற்காக பயன்படுத்தபடுத்தப்படும் ஸ்கானர் கருவி உட்பட மண் அகழ்வதற்கான உபகரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. வவுனியா இராணு புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு...

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்து!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இன்று (18) இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். கேகாலை மொலகொட பிரதேசத்தில் இரண்டு கார்கள் மோதியதில் குறித்த  விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வாகனங்களில் இருந்த எட்டு மாதங்கள் மற்றும் ஒன்றரை வயதுடைய இரண்டு குழந்தைகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்...

இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவளிக்கவுள்ள வேட்பாளர் யார்??

ஜனாதிபதித் தேர்தல்  வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியான பின்னரே தாம் ஆதரவளிக்கவுள்ள வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. வவுனியாவில் இன்று (18) இடம்பெற்ற, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து  தெரிவித்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். கட்சித்தலைவர் மாவை...

யாருக்கு ஆதரவு  இ.தொ.கா?  – வெளியான உத்தியோகபூர்வ தகவல்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்றைய தினம் (18) கூடியுள்ளது. இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...
- Advertisement -

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...