Thursday, July 2, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

மரம் சரிந்து விழுந்ததில் இரயில் சேவை பாதிப்பு..!

கலபொட மற்றும் இங்குரு ஓயா இரயில் நிலையங்களுக்கு இடையிலான பென்ரோஸ் பகுதியில் மரம் சரிந்து விழுந்ததில் இரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி இரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை குறிப்பிட்டுள்ளது.

கட்டுவன பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை ..!

கட்டுவன, அமுதமன பிரதேசத்தில் இன்று காலை 41 வயதுடைய நபரொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கட்டுவன பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரர் ஒருவர் அவரை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிவில் சமூகப் பிரதிநிதிகள் சந்திப்பு..!

மலையகத்தில் ஹட்டன், கண்டி, நுவரெலியா, இரத்னபுரி, பதுளை மாவட்டங்களில் இருந்து சுமார் 30 சிவில் சமூகப் பிரதிநிதிகள் வடக்கு  மாகாணத்திற்கான "நட்புறவு சுற்றுப் பயணம்" மேற்கொண்டுள்ளனர். மேலும் இச்சந்திப்பின் போது போது கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் உள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளனர். அதேவேளை வடக்கு மாகாண அரசியல் கட்சி முக்கியஸ்தர்களையும்  சந்தித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை VOVCOD...

தனியாருக்கு குறைந்த விலையில் நெல் விற்பனை! விவசாயிகள் கவலை..!

அரசாங்கம் உரிய நேரத்தில் நெல்லை கொள்வனவு செய்ய தவறுகின்ற நேரத்தில் அதனை பயன்படுத்தி தனியார் மிகக்குறைந்த நெல்லை கொள்வனவு செய்வதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிளிநொச்சி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள குடமுருட்டி குளத்தின் கீழ் 340ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்ச்செய்கை மேற்கொண்ட நிலையில் தற்போது அறுவடை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அறுவடை ஆரம்பிக்கப்பட்ட நிலையில்...

சாரதியின் கட்டுப்பாட்டை மீறிய கப்ரக வாகன விபத்தில் அரச சொத்துக்கு பாதிப்பு..!

கிளிநொச்சி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கனகபுரம் வீதியில் 23.06.2024 இன்று அதிகாலையில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறிய கப்ரக வாகனம் அருகில் உள்ள இலங்கை தொலைத் தொடர்பு வளையமைப்புகள் பொருத்திய தூணில்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் இரண்டு தொலைதொடர்பு தூண்கள் செய்ததுக்கு உள்ளாக்கப்பட்டதோடு வலைய அமைப்பு வயர்களும் சேதமாகப்பட்டமையினால் அவ் வீதியூடாக செல்கின்ற வலைய அமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இவ் விபத்து...

தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி!

பொசன் போயாவை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, பேருந்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் முச்சக்கர வண்டியில் அனுராதபுரம் சென்றுள்ளனர். இதன் போது, ​​தம்புள்ளை பகுதியிலிருந்து...

பொலிஸ் தலைமையகம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை..!

அனுராதபுரம், பசவக்குளம் ஏரியில் நீராடச்சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த நபர் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார். பொசன் பண்டிகைக்காக விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அனுராதபுரம் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் குறித்த நபரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டோலுகந்த பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய புஸ்ஸா என்ற இளைஞனே இவ்...

இந்தியாவில் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்..!

இந்தியாவின் இராமேஸ்வரத்தில் கைதான புத்தளத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் இருவரும் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புத்தளத்தில் இருந்து கடற்றொழிலுக்காக புறப்பட்டு திசை மாறிப் பயணித்துவிட்டதாகக் கூறி புத்தளத்தைச் சேர்ந்த இருவர் இராமேஸ்வரம் கடற்கரையில் நின்ற வேளை தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இருவரும் பயணித்த படகில் எந்தவொரு...

தெனுவன் சத்துரங்கவின் உதவியாளர் கைது..!

துபாயில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான தெனுவன் சத்துரங்கவின் உதவியாளர் ஒருவர் ஐந்து இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் சம்பாதித்த 300,000 ரூபா பணம் ஆகியவற்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடதக்கது.

நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (23.06) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  சில பகுதிகளில்  75 மில்லிமீற்றர் வரையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும்  வட மாகாணத்திலும் மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும்  எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.  மத்திய...
- Advertisement -

Latest News

திரையரங்குகளுக்கு மீண்டும் வரும் மாதவனின் ‘ரன்’

2002 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாதவனின் ரன் திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்...