Wednesday, July 15, 2026
No menu items!

News

புதுவருடத்திலும் தொடரும் யுத்தம்

மத்திய காசாவிலுள்ள மகாஸி முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல் காரணமாக நேற்றைய தினம்(01) மாத்திரம் 156 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகம் முழுவதும் மக்கள் புதுவருடத்தை கொண்டாடும் தருணத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் பொதுமக்கள் கொள்ளப்படுவது வருத்தமளிப்பதாக சர்வதேச அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஹமாஸ்...

 எதிவரும் 4ம் திகதி  ஆரம்பமாகவுள்ள க பொ த உயர்தர  பரீட்சைகள்.

தொடரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக கெக்கிராவ மடாட்டுகம ரேவத வித்தியாலயத்திற்கான பரீட்சை மத்திய நிலையத்தை கல்கிரியாகம மத்திய மகா வித்தியாலயத்தில் மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், முதல் முறையாக கொரிய மொழி  மூலம்  பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கத்தக்கது. பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அதனை...

புதிய வரி அறிமுகம்

புதிய வரிகள் மற்றும் வரி அதிகரிப்பு தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முக்கிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல அக்குரேகொட இராணுவத் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய விமானப்படைத் தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். 2025ஆம் ஆண்டில் புதிதாக செல்வ வரி ஒன்று அறவிடப்படும்...

கின்னஸ் சாதனை படைத்த இந்தியா..!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் புத்தாண்டை முன்னிட்டு நான்காயிரம் பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து சாதனை செய்துள்ளனர். இந்த சாதனையானது மோதரா சூரியக் கோவிலில் நேற்று (01.01.2024) காலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குஜராத்தின் முதல் அமைச்சர் பூபேநந்திரபாய்ப் பட்டேல் பங்கேற்றிருந்தார். மேலும் இது தொடர்பில் குஜராத்தின் உள்துறை அமைச்சர் சங்வி கூறும்போது, ‘நாட்டிலேயே இன்று,...

தென்கொரியாவில் எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக்குத்து

தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (02) தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு எதிர்க்கட்சித் தலைவர் விஜயம் செய்தபோதே இனந்தெரியாத நபரொருவரால் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், உடனடியாக உள்ளூர் பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தாக்குதலில் அவரது கழுத்தில் சுமார் ஒரு சென்றி மீற்றர் அளவில்...

வைத்தியர்களின் கவனக்குறைவால் உயிரிழப்பு..!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மார்பக சத்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் வைத்தியர்களின் கவனக்குறைவால் கடந்த 31ம்   திகதி உயிரிழந்துள்ளார். நூகேகொட பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்திய சாலையில் 6A விடுதியில் அனுமதிக்கப்பட்ட நபரே சத்திர சிகிச்சையின் போது  சுவாசத்திற்கான  ஒட்சிசன் வாயுவிற்கு பதிலாக காபனீரொக்சைட் வாயு வழங்கப்பட்ட...

தீ விபத்தில் இருவர் பலி – யாழில் சம்பவம்

யாழ் பருத்தித்தறைப் பகுதியில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ் பருத்தித்தறைப் பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் உபகரண களஞ்சியசாலை ஒன்றிலேயே இன்று (02.01.2024) காலை தீ விபத்து ஏற்பட்டள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்ததைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான நபரும், வேலாயுதம் ரவி என்கின்ற...

இன்றும் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு, ஊவா, மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...

முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடிய நாடு

கிறிஸ்மஸ் தீவு என அழைக்கப்படும் கிரிபாட்டி தீவிற்கு அடுத்தபடியாக முதல் நாடாக நியூசிலாந்து 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை   கொண்டாடியுள்ளது. இலங்கை நேரப்படி நேற்று (2023.12.31)  4.30 மணியளவில் நியூசிலாந்தில்  நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு ஆரம்பமாகியுள்ளது. இந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசு, வானவேடிக்கைகளுடன் அந்நாட்டு மக்கள் வெகு விமர்சையாக  கொண்டாடிவருகின்றனர்.

புத்தாண்டு வாழ்துச் செய்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024 புது வருடத்தை ஆரம்பிக்கிறோம்.என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கடந்த ஆண்டில் நீங்கள் செய்த அர்ப்பணிப்புக்கள் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்கும் ஆரம்ப கட்ட முயற்சிகளுக்கு உதவியாக இருந்தது. இருப்பினும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக, அதேபாதையில் தொடர்ந்து பயணிக்க வேண்டியது அவசியமாகும்....
- Advertisement -

Latest News

பல மாத காத்திருப்புக்கு பின் ஜனநாயகன் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகரும்,தமிழ்நாட்டின்  முதலமைச்சருமான விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பல மாத காத்திருப்புக்கு மத்தியில் இந்த மாதம் 23 ஆம்...