Thursday, July 16, 2026
No menu items!

News

வெற்றி பெற்றது தஜிகிஸ்தான் அணி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் A குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் இரண்டாவது போட்டியில் தஜிகிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் தஜிகிஸ்தான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. தஜிகிஸ்தான் அணி சார்பாக பர்விஷ்டோன் உமர்பயெவ் 80 ஆவது நிமிடத்திலும் நூரித்தீன் கம்ரோகுலொவ் மேலதிக...

வெற்றி பெற்றது கட்டார் அணி

2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் நேற்றைய தினம் A குழுவின் 2 போட்டிகள் நடைபெற்றிருந்தன. அதில் முதலாவது போட்டியில் சீனா மற்றும் கட்டார் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் கட்டார் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. கட்டார் அணி சார்பாக ஹஸ்ஸன் அல் ஹைடஸ் 66 ஆவது நிமிடத்தில் ஒரு...

இன்றும் சில பகுதிகளில் மாலை வேளையில் மழை

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும். நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணக்கூடிய சாத்தியம் காணப்படும். சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி...

பிரமாண்ட முறையில் நடந்த அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்

அயோத்தி  ராமர்  கோவில்  கும்பாபிஷேகம் இன்று (22) பிரமாண்டமான  முறையில்  மிகவும்  கோலாகலமாக நிறைவடைந்துள்ளது. பிரதமர்  நரேந்திர  மோடியினால்  சமய  சடங்குகள் செய்யப்பட்டதுடன்  கும்பாபிஷேகம்  நடத்தப்பட்டது. இதையடுத்து  பால  ராமரின்  கண்  திறக்கப்பட்டது. கடந்த  18ஆம்  திகதி  கோவில்  கருவறையில்  5 வயதான  குழந்தை பருவ ராமர் சிலை நிறுவப்பட்டது. இந்த  சிலையே  இன்று  பிரதிஸ்டை  செய்யப்பட்டது. கோயில்  கருவறையில்  உள்ள ...

முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை – U19

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் இலங்கை அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.3 ஓவர்களில் 204...

இஸ்ரேலை எச்சரித்த ஈரான் ஜனாதிபதி

சிரியாவின் குடியிருப்பு மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எச்சரித்துள்ளார். சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டில் ஆலோசனைக் கடமைகளில் ஈடுபட்டிருந்த ஈரானிய உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரானும் சிரியாவும் குற்றஞ்சாட்டி...

யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (21) மாலை வயலை பாதுகாப்பதற்காகசென்றவரை  யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். 67 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவ இடத்திற்க்கு  திடீர் மரண விசாரனை அதிகாரி எம்.எஸ்.ஷாபி சென்று உயிரிழந்தவரின் சடலத்தை பார்வையிட்டதோடு, இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வான் எல...

நடைமுறைப்படுத்தப்படவுள்ள VAT FREE SHOP

VAT இல்லா நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்வதற்காக நாடு முழுவதும் VAT FREE SHOP என்ற தொடர் கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கடுவெல பிரதேசத்தில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தமது அமைச்சின்...

அரசியல்வாதி உட்பட ஐவர்  சுட்டுக் கொலை

மாத்தறை - பெலியத்தை பகுதியில் இன்று (22) காலை ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் துப்பாக்கிச் சூட்டில்  உயிரிழந்த ஐவரில்  அபே ஜனபல பக்‌ஷய கட்சியின்...

இலங்கை தமிழ் சமூகத்திற்கு கனேடிய பிரதமர் வழங்கியுள்ள உறுதி

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள் சவால்களுக்குட்பட்டு வருவதாகவும் தமிழ் சமூகத்துடன் கனடா தொடர்ந்தும் பயணிக்கும் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  உறுதியளித்துள்ளார்.  தைப்பொங்கல் நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே இவ்வாறு  உறுதியளித்துள்ளார். மேலும் கனடா சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து தமிழர் நலன் தொடர்பில் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்  1983ஆம் ஆண்டு இலங்கையில் வன்முறைகள் ஆரம்பித்த காலத்தில்...
- Advertisement -

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...