Saturday, May 30, 2026
No menu items!

World News

உளவு செயற்கைக்கோள் நடுவானில் வெடித்துச் சிதறியது!!

வட கொரியாவின் இரண்டாவது உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியடைந்தது. வட கொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது. இயந்திரக் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்ததாக வட கொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திரவ ஒக்சிஜன்,பெட்ரோலிய இயந்திரத்தில் வெடிப்பு ஏற்பட்டது என்று முதற்கட்ட பரிசோதனையில்...

கல்குவாரியிலிருந்து சரிந்து விழுந்த பாறைகள்: 10 பேர் பலி,

உலகளாவிய ரீதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பலர் பலியாகியுள்ளதோடு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்தியாவின் மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக கல்குவாரியிலிருந்து பாறைகள் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, கற்களுக்கு இடையில் சிக்குண்டவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. மேலும் குறித்த பகுதியில் பெய்து வரும்...

விமானநிலையத்திற்கு அச்சுறுத்தல்!!!

டெல்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி செல்ல இன்று செவ்வாய்க்கிழமை காலை விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில், இண்டிகோ நிறுவனத்திற்கு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தகவலறிந்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிஸார்கள்  விமானத்தை...

பாரிய நிலச்சரிவு; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு….

பப்புவா நியூ கினியாவில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2, 000 ஆக உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதுவரையில் 150 வீடுகள் வரை மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பப்புவா நியூ கினியாவில் வடக்கேயுள்ள எங்கா பிராந்திய மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில்...

தீயினால் உயிரிழந்த குழந்தைகள்!!!

டெல்லியில் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தை மருத்துவமனையில் நேற்று முந்தினம்(25.05.2024) இரவு 11.32 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டடுள்ளது. குறித்த தீவிபத்து தொடர்பான தகவல் அறிந்து உடனடியாக செயற்பட்ட தீயணைப்பு குழுவினரால் கடுமையான...

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்திய மக்களவைத் தேர்தல்..!

இந்திய மக்களவைத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நாடாளுமன்றத்தின் 543 இடங்களை வெற்றிகொள்ள முடியுமென நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஐந்தாவது கட்டத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்கனவே 310 இடங்களை கைப்பற்றியுள்ளதாக இந்திய உள்விவகார அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்தார். இதன்படி, பாரதிய ஜனதா...

நீதிமன்றத்தின் தீர்ப்பை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை..!

சர்வதேச நீதிமன்றம் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ள போதிலும் இஸ்ரேல் அதனை ஏற்றுக்கொள்ளும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தனது இராணுவநடவடிக்கையை நிறுத்தவேண்டும் என சர்வதேசநீதிமன்றம் உத்தரவிடக்கூடாது என இஸ்ரேல் எதிர்பார்த்தது ஹமாசினை தோற்கடிப்பதற்கு இராணுவ நடவடிக்கை அவசியம் என இஸ்ரேல் கருதுகின்றது. எனினும் சர்வதேச...

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்:24 பேர் பலி!!!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஒரே இரவில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மற்றும் மத்திய காசாவில் குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா நகரின் மையத்தில் அமையப்பெற்றுள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றுமுன் தினமும் இஸ்ரேலிய இராணுவம் ஷெல் தாக்குதல் மேற்கொண்டது. இதன்போது 10 குழந்தைகள் உட்பட 16...

கியூபாவுக்கு எதிரான தடையை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரும் இலங்கை!  

அமெரிக்காவினால் (America) வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை (Cuba) நீக்கம் செய்யக் கோரும் பிரகடனத்திற்கு இலங்கை ஜனநாயக ஒன்றியங்களின் கூட்டுக் குழு தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. கியூபாவை தன்னிச்சையான பட்டியலில் சேர்ப்பது அரசியல் நோக்கங்களைக் கொண்டுள்ளதோடு கியூபா மக்களுக்கு கடுமையான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்று கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.

நெதன்யாகுவிற்கு நெருக்கடியை கொடுக்கும் உயர் நாடுகள்!!

பலஸ்தீனத்தை தனியொரு நாடாக அங்கீகரிப்பதற்கு நோர்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ள நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. காசாவின் தெற்கு ரஃபா மற்றும் வடக்கு ஜபாலியா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் பாரியளவில் தாக்குதல் மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேலிய துருப்புக்கள் முன்னேறி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில்...
- Advertisement -

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...