இலங்கை மின்சார சபையுடன் (CEB) தொடர்புடைய விடயங்களை விசாரிப்பதற்காக இலங்கை ட்ரான்ஸ் போர்மர்ஸ் நிறுவனம் (Lanka Transformers Company) நேற்று கோப் குழுவின் (Committee on Public Enterprises) முன் அழைக்கப்பட்டிருந்தது.

எனினும், ஒரு தனியார் நிறுவனத்தை குழுவின் முன் அழைத்தது குறித்து, குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, குழுவிற்குள் தற்காலிக விவாத நிலை ஏற்பட்டது.

இதற்கு பதிலளித்த கோப் குழுத் தலைவர் வைத்தியர் நிஷாந்த சமரவீர, இலங்கை மின்சார சபை விசாரணைகளை நிறைவு செய்ய தேவையான தகவல்களைப் பெறும் நோக்கிலேயே குறித்த நிறுவனம் குழுவின் முன் அழைக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

இதற்கிடையில், கோப் குழு இலங்கை ட்ரான்ஸ் போர்மர்ஸ் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here