2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பிரித்தானிய ஊடகமான சனல் 4 இன் ஆவணப்படம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தமக்கு எதிராக மேற்கொண்ட விசாரணைகள் அரசியல் பழிவாங்கல் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிள்ளையான்,

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்க திணைக்களமொன்று விசாரணைகளை மேற்கொள்வதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

” CID போன்ற துறைகள் சில தனிநபர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படாமல், புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

தனது 5 மணி நேர வாக்குமூலத்தின் போது, ​​தமிழில் வாக்குமூலத்தை வழங்க விரும்புவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நேற்று முன்தினம் அறிவித்ததாகவும், அதன் பின்னர், அது தொடர்பான மொழி பெயர்ப்புப் பணிகளைத் தயாரிப்பதற்காக இன்றே ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 ஆவணப்படத்தில் தனது பெயர் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று இரண்டாவது நாளாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகியதன் பின்னர் பிள்ளையான் இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here