அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவர் பதவி தற்போது வெற்றிடமாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் நேற்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், குறித்த பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுவதற்கான ஒப்புதலின்படி தான் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கமைய, செப்டம்பர் 12 ஆம் திகதி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here