தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், இந்த வேலைவாய்ப்புகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் மட்டுமே வழங்கப்படும் என்றும் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவில் E-9 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள் குழுவிற்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

E-8 விசா பிரிவின் கீழ் வேறு எந்த நபரோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமோ வேலை வாய்ப்புகளை வழங்க அனுமதிக்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறும் கோசல விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

“தென் கொரியாவில் வேலைகளில் சேர்க்கப்பட்ட புதிய விசா வகை E-8 விசா வகையாகும். முறையான விவசாய அறிவைக் கொண்ட தகுதியான நபர்களை மட்டுமே பணியமர்த்துகிறோம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலிருந்து மட்டுமே E-8 விசா பிரிவின் கீழ் இளைஞர்கள் வேலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

எதிர்காலத்தில் இந்தப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்படும். தன்படி, பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் முறை மற்றும் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து ஊடகங்கள் மூலம் வேலை தேடுபவர்களுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் கோசல விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here