மட்டக்களப்பில் இயங்கிவரும் ஜ.டி.எம் ஈஸ்ரன் கம்பெஸ் (IDM EASTERN CAMPUS ) 6 வது வருட பூர்த்தியை முன்னிட்டு ‘மனித உயிர் அரியது அதைக் காக்கும் இரத்தம் பெரியது இரத்ததானம் செய்வோம் உயிரை காப்போம்’ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்தத்தை தானம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (07.12.2024) மட்டக்களப்பு பயினியர் வீதியிலுள்ள கம்பெஸ் கட்டிடத்தில் இடம்பெற்றது.

கம்பெஸ்சின் பணிப்பாளர் தே.சசிக்குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட  இரத்ததான முகாமில் அங்கு கல்வி கற்றும் மாணவர்கள் மற்றும் ஜ.டி.எம். ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் உட்பட பலர்கலந்து கொண்டு இரத்தத்தை தானமாக வழங்கி வைத்தனர்.

[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here