பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) பிரதம தூதுவர்  கிறிஸ்டின் பி பார்கோவுக்குமிடையில் நேற்று (02) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற மரியாதைக்குரிய சந்திப்டிபான்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, ​​இணைய மோசடிகளை தடுப்பதற்கான இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல், மியன்மாருக்கு கடத்தப்பட்ட இலங்கை பிரஜைகளை மீட்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேற்படி இச்சந்திப்பில்  தேசிய ஆராய்ச்சி மற்றும் கூட்டாண்மை அதிகாரி மாதவி என்.குணவர்தன, பாதுகாப்பு பிரிவின் தலைவர் மினோலி பி.டான் மற்றும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும்  தயானி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here