அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியிடம் (NPP) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த SLFP கெஸ்பேவ அமைப்பாளர் சட்டத்தரணி கீர்த்தி உடவத்த,
முன்னர் சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த குழு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் NPP உடன் கைகோர்க்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
“முன்னர் எடுத்த முடிவு தவறானது என்பதை இப்போது உணர்ந்துள்ளோம். உள்ளூராட்சி மட்டத்தில் எங்களிடம் தலைமை இருப்பதால், அவர்களின் கொள்கைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஒரு அமைப்பைச் செயல்படுத்த உதவும் திறன் கொண்டவர்கள் என்பதால், NPP க்கு உதவுமாறு நாங்கள் இப்போது கேட்டுக்கொள்கிறோம், ”என்று அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிட்டத்தட்ட 40 அமைப்பாளர்கள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் கைகோர்க்குமாறு வலியுறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கடுவெல அமைப்பாளர் ஹெக்டர் பெத்மகே தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த குழு, ஜனாதிபதித் தேர்தலில் SJB க்கு ஆதரவளித்ததில் தங்கள் தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








