நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூர் நகரில் புதன்கிழமை பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) மற்றும் நிகழ்வு மேலாண்மை நிறுவனமான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் ஆகியவற்றின் நிர்வாகிகளை கைது செய்ய முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
இது தொடர்பில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணியின் சந்தைப்படுத்தல் தலைவரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
சின்னசாமி ஸ்டேடியம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக பெங்களூரு பொலிசாரால் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஆர்சிபி அதிகாரியும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








