பாகிஸ்தானில் ஆரம்பமாக உள்ள இருபதுக்கு 20 முத்தரப்பு தொடருக்கான இலங்கை தேசிய அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஒருநாள் தொடரின்போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இன்னும் முழுமையாக குணமடையாத வனிந்து ஹசரங்க அணியில் சேர முடியாத நிலையில், அவருக்குப் பதிலாக வியாஸ்காந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது கட்டாரில் நடைபெற்று வரும் Asia Cup Rising Stars தொடரில் இலங்கை ‘A’ அணிக்காக விளையாடி வரும் வியாஸ்காந்த், அங்கிருந்து நேரடியாக பாகிஸ்தானுக்குப் பயணிக்கவுள்ளார்.

இன்று ஆரம்பமாகும் இந்த T20 முத்தரப்பு தொடரில், இலங்கை அணி தனது முதல் போட்டியில் நாளை மறுதினம் ஸிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here