Sunday, June 28, 2026
No menu items!

கிளிநொச்சி

மருதானை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது கொலையா? தற்கொலையா?

மருதானை பொலிஸ் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்ட தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டுவரப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார் . மருதானை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்ப் பெண்ணின் தற்கொலை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். குறித்த செய்திக் குறிப்பில், கிளிநொச்சியைச்...

திருட்டு வலையில் சிக்கிய சாரதி!

வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகளை இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ். நகர் பகுதியில் வாடகை முறையில் இயங்கும் கன்ரர் ரக வாகனத்தின் சாரதி ஒருவரது நகைகளே நேற்றைய தினம் (19) கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வாகன வாடகை தரிப்பிடத்துக்கு சென்ற இருவர், கிளிநொச்சி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிவர...

கிளிநொச்சியில் கலை கட்டும் தைப்பொங்கல்..!

கிளிநொச்சியில் தைப்பொங்கல் கலை கட்டும் வகையில் மக்கள் ஆர்வத்துடன் தைப்பொங்களை கொண்டாடுவதற்காக பொருட்களை கொள்வனவு செய்வதை எம்மால் இன்றைய தினம் 13.01.2025 அவதானிக்க கூடியவாறு இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பேருந்துடன் உந்துருளி மோதிய விபத்தில் ஒருவர் பலி!

கிளிநொச்சி - கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை யாழ்ப்பாணம் - பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துடன் உந்துருளி ஒன்று மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் உந்துருளியில் பயணித்தவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக...

எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு – அச்சத்தில் மக்கள்..!

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) எனச் சந்தேகிக்கப்படும் நோய் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி - முழங்காவில் மற்றும் கண்டாவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே காய்ச்சல், தசைநோவு,...

இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு – விசாரணை தீவிரம்..!

கிளிநொச்சி A.35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கனை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. A 35 பிரதான வீதியின் புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனைக் கடத்த முற்பட்டமைக்கு – கிளி மாவட்ட ஊடக அமையம் கண்டனம்..!

இனந்தெரியாதோரால் தமிழ்ச்செல்வன் கடத்த முற்பட்டதையும்  தாக்கப்பட்டமையையும் கிளிநொச்சி ஊடக அமையம்   கண்டிக்கிறது. இது குறித்து அமையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - எமது ஊடக அமையத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான முருகையா தமிழ்ச்செல்வன், நேற்று மாலை தனது பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் வழியில் வாகனத்தில் வந்தோர் அவரை இடைமறித்து தமது வாகனத்தில் பலவந்தமாக...

கௌதாரி முனையில் இனிமேல் மணல் அகழ்வுக்கு அனுமதி இல்லை..!

கௌதாரி முனையில் மண் அகழ்வுக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கௌதாரி முனை ஒரு முக்கியமான பிரதேசம். அந்த...

மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்கும் பணி முன்னெடுப்பு..!

மீனவர்களுக்கென சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மீன்பிடி வலைகள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு வழங்கும் பணி இன்று (23.12.2024) முன்னெடுக்கப்பட்டது. வடபகுதி மீனவர்களுக்கென கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட மீன் பிடி வலைகள் கிளிநொச்சி மாவட்ட மீனவர்களுக்கு வழங்கும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்கல் திணைக்கள அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. கிளிநொச்சி...

இளம் யுவதியை கடத்திய கும்பல்- கடத்தப்பட்டதன் காரணம் என்ன?

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இரணைமடுச் சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் வைத்து இளம் பெண்ணொருவர் நேற்று (16) மாலை 6 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புன்னாக்லைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய குறித்த யுவதி, கிளிநொச்சியிலுள்ள அழகுக்கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில், கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில் வழமை...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img