காதலனின் வீட்டிலிருந்து தங்க நகைகளை திருடிய காதலி!
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞரும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமண தினமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த சில நாட்களாக காதலி காதலனின் வீட்டில்
கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் உயிரிழந்த மாமனார்!
கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமனார் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்குத் தப்பி ஓடி வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த மருமகன் மகளைத் தாக்க முற்பட்டபோது, அதனைத் தடுக்கச் சென்ற மாமனாரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு வருகை; ரவிகரனின் கோரிக்கைக்கு இணக்கம்!
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் கடுமையான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கோரிக்கையை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார். இதன்படி, ஜனாதிபதி விரைவில் முல்லைத்தீவிற்கு வருகைதந்து மீனவர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி இடையிலான சந்திப்பு
கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் சடலமாக கிடந்த பெண்!
கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏ9 வீதியின் தட்டுவன்-கொட்டி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்திலே இனங்காணப்படாத நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது!
கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக ஐந்து ஆண்கள் மற்றும் ஐந்து பெண்கள் என மொத்தம் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிரடிப்படையினர் ஒருவரை கைது செய்தபோது, இரும்புக் கம்பிகள் மற்றும்
GovPay ஆன்லைன் முறையில் பொலிஸ் போக்குவரத்து அபராதம் – வட மாகாணத்திலும் நடைமுறைக்கு!
GovPay-யின் மூலம் பொலிஸ் போக்குவரத்து நேரடி அபராதம் செலுத்தும் வசதி வடக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. GovPay-யின் நேரடி அபராதம் செலுத்தும் வசதி முன்னர் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் மட்டுமே இருந்தது, மேலும் வடக்கு மாகாணத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், அரசாங்கத்தால் ஆன்லைன் பொலிஸ் போக்குவரத்து இடங்களில் அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் நாட்டின் மூன்றாவது மாகாணம்
இஷாரா செவ்வந்தி வழக்கில் புதிய தகவல்கள் – 7 பேர் கைது!!
நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பல முக்கிய விடயங்கள் வெளிச்சம் பெற்றுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர் தலைமறைவாக இருந்த காலப்பகுதியில் உதவி புரிந்தமை தொடர்பாக, கிளிநொச்சி உள்ளிட்ட வடபகுதி பகுதிகளைச் சேர்ந்த ஏழு
வடமாகாணத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (26) மின்வெட்டு – மின்சாரசபை அறிவிப்பு!
வடமாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் எதிர்வரும் (26) ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. வவுனியா–மன்னார் 220kV மின் பரிமாற்ற இணைப்பை மாற்றியமைக்கும் (Re-conductoring) பணிகள் நடைபெறவுள்ளதால், வவுனியா புதிய–அநுராதபுர 132kV மின் பரிமாற்ற கட்டமைப்பின் கீழ் உள்ள பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும்
வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் -ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்!
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் இன்று காலை (13) ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளி மாவட்ட சேவை காலத்தை நிறைவு செய்து பல ஆண்டுகள் கடந்துள்ள
கிளிநொச்சியில் ஆசிரியர் தீயிட்டு தற்கொலை!
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள ஆசிரியர் விடுதியில், ஆசிரியர் ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது. இறந்தவரின் உடல் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.