Sunday, June 28, 2026
No menu items!

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமயில்!

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (04.07.2024) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் முரளிதரனால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ்....

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் பதவியேற்பு!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய ரூபாவதி கேதீஸ்வரன் ஓய்வுபெற்றதுடன் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய எஸ்.முரளிதரன் பிரதி ஆளுநராக கடமையாற்றி வந்தார். இந்நிலையில் 03.07.2024 அன்று பிரதமர் தினேஷ் குணரத்ன இவருக்கான நியமனத்தை நேற்று வழங்கியிருந்தார். புதிய நியமனத்தை பொறுப்பேற்க வருகை தந்த...

பிரதமர் தினேஷ் குணவர்தனவால் நியமனக் கடிதம் வழங்கிவைப்பு..!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர்களிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தனவால் இன்றையதினம் நியமனக் கடிதம் வழங்கிவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கடமை நிறைவேற்று அரச அதிபர்களாக இருந்த ம.பிரதீபன் மற்றும் எஸ்.முரளிதரன் ஆகிய இருவருக்குமே முழு நேர பதில் அரச அதிபராக பணியாற்ற அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில் குறித்த நியமனம்...

வீ.ஆனந்தசங்கரியின் இரங்கல் செய்தி..!

சம்பந்தன் ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது. அதை யாரும் மறுக்க முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு வழங்கிய இரங்கல் செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்து அண்மையில் காலமடைந்த திரு சம்பந்தன் பற்றி நான் கூறினால் அனேகர் ஆச்சரியத்துடன்...

ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் !

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி அக்ரோ ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு நேரில் சென்று அதன் உற்பத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். வடமாகாணத்தில் முதன்முறையாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் 'லங்காஜம்போ' நிலக்கடலை உற்பத்தி முறையானது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஜம்போ நிலக்கடலை உற்பத்தி ஏற்றுமதி பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக ; மேதகு எஸ்.முரளிதரன்!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இன்று மேதகு எஸ்.முரளிதரன் அவர்கள் பதவியேற்றுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை இன்றைய தினம் பிரதம அலுவலகத்தில் பிரதமரிடம் இருந்து பெற்றுக்கொண்டாரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  

இயக்கச்சியில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இயக்கச்சி சந்தியில் புதிதாக மதுபான சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதையடுத்து கிராம மக்கள் அமைப்புக்கள் இணைந்து எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (02)காலை 10.00மணியளவில் இயக்கச்சி சந்தி ஏ09வீதி அருகே இடம்பெற்றிருந்தது. மேலும் குறித்த மதுபான சாலை அமைய இருக்கும் இடத்திலிருந்து சுமார் 50மீற்றர் தொலைவில் பாடசாலை...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் அவர்களுக்கு அஞ்சலி; தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில்!

இறந்த  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிக்கையில் தமிழ்த்தேசிய இனத்தின் மிகப்பெரும் தலைவராக நீண்ட...

பிளாஸ்டிக் இல்லாத நாட்டை உருவாக்கும் செயல் திட்டத்தில் கிளிநொச்சி பொலிஸார்!

பிளாஸ்டிக் இல்லாத நாட்டை உருவாக்கும் தொனிப்பொருளில் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வரும்  பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் கூடைகளை பொருத்தமான இடங்களில் இனம் கண்டு கூடைகளை வைத்து வருகின்றார்கள். குமரபுரம் 6 ஆம் வீதி கலைச்செல்வி மோகனபவன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இக் கிளிநொச்சி பொலிஸாருக்கு பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் கூடைகளை வழங்கியுள்ளார். இப் பொருட்களை கிளிநொச்சி...

சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்..!

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக காணாமல் போன சிறுவனும், அவனது சகோதரன் மற்றும் இரு நண்பர்களுமாக சென்றுள்ளனர். காலை 11.30 மணியளவில் நீராடச் சென்ற இவர்களில் செல்வரத்தினம் றுசாந்தன் எனும் 14 வயதுடைய சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார்....
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img