Wednesday, June 24, 2026
No menu items!

மேலதிக விசாரணை

காலி, கொஸ்கொடையில் துப்பாக்கிச் சூடு – 23 வயது இளைஞர் உயிரிழப்பு!

காலி மாவட்டத்தின் கொஸ்கொட பகுதியில் இன்று (ஜூலை 31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. T56 வகை துப்பாக்கியால் அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதியளித்துள்ளார். இந்த திடீர் தாக்குதல் தொடர்பாக கொஸ்கொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குற்றத்தில்...

யாழில் இடம்பெற்ற கோரவிபத்து!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியின் கோப்பாய் பகுதியில் நேற்றையதினம் கோர விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனியார் பேருந்தும் காரும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சிலரும் காரில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். (யாழ் நிருபர்-...

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பலவாகனங்களுடன் மோதி விபத்து- ஒருவர் பலி!

பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஐந்து பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஒரு கனரக வாகனம் (Bucket truck) பல வாகனங்களுடன் மோதியதே இந்த விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ் விபத்து...

தெஹிவளை துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் சுட்டுக்கொலை!

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், இன்று (25) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கஹதுடுவ பகுதியிலுள்ள பஹலகம, கெதல்லோவிட பிரதேசத்தில் அமைந்திருந்த பாழடைந்த வீட்டை பொலிசார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சோதனையிட்டனர். அதில் பதுங்கி...

ரூ.400 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் உடன் வந்த பயணி கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று (25) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தார். சந்தேகநபரின் பயணப் பொதிகளை...

யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் விபத்து –உயிர்தப்பிய அதிகாரிகள்!

யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி பிரதான வீதியில் கந்தர்மடம் சந்தியில் நேற்று இரவு 10 மணியளவில் யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.நகர் பகுதியிலிருந்து திருநெல்வேலி பகுதியை நோக்கி...

சட்டவிரோத சிகரெட் கடத்தல் முயற்சி – 22 வயது வவுனியா இளைஞர் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 10,000 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (21) அதிகாலை நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்...

காரைநகர் கசூரினா கடற்கரையில் பரவிய தீ !

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சவுக்கு மரங்கள், பனை மரங்கள் புற்கள் ஆகியவற்றில் தீ பரவியுள்ளது. இச் சம்பவம் நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த பிரதேச மக்கள் பொலிசாருக்கும் கடற்படையினருக்கும்  தகவல் வழங்கியதை அடுத்து அங்கு சென்ற பொலிசாரும் கடற்படையினரும் பிரதேச சபையினரும்...

முள்ளியவளையில் பெண்ணின் தங்க சங்கிலியை பறித்த கொள்ளையர்கள்; ஊர்மக்களால் துரத்தி பிடிப்பு!

மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று முந்தினம் (15.07) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு - முள்ளியவளை பொன்னகர் கிராமத்தில் உள்ள வளர்மதி மைதானத்திற்கு அருகாமை இரவு 7 மணியளவில் வீதியால் பயணித்தபோது, இனந்தெரியாத கொள்ளையர்கள் இருவர்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 32 வயது நபர் ஒருவர் உயிரிழப்பு!  

நிவிதிகல, தம்மோருவ சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 32 வயது நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொழம்பகம, நிவிதிகலவைச் சேர்ந்த இவர், மூன்று பேருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து கொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிவிதிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img