மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக பொது முகாமையாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மறு அறிவித்தல் வரை இந்த விடுமுறை ரத்து அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை, 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின்படி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால் கையெழுத்திடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்சார விநியோகம் போன்ற அத்தியாவசிய சேவைகளில் இடையூறு ஏற்படாமல் நாட்டின் சாதாரண பொது வாழ்க்கை பாதிக்கப்படாதபடி இந்த வர்த்தமானி அறிவித்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here