Saturday, April 18, 2026
No menu items!

அபராதம்

GovPay ஆன்லைன் முறையில் பொலிஸ் போக்குவரத்து அபராதம் – வட மாகாணத்திலும் நடைமுறைக்கு!

GovPay-யின் மூலம் பொலிஸ் போக்குவரத்து நேரடி அபராதம் செலுத்தும் வசதி வடக்கு மாகாணத்தில் நேற்றைய தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. GovPay-யின் நேரடி அபராதம் செலுத்தும் வசதி முன்னர் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் மட்டுமே இருந்தது, மேலும் வடக்கு மாகாணத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், அரசாங்கத்தால் ஆன்லைன் பொலிஸ் போக்குவரத்து இடங்களில் அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்தும்...

மேல் மாகாணத்தில் தனியார் பேருந்துப் பயணிகளுக்கு கட்டாயமாக பயணச்சீட்டு – விதிமீறுபவர்களுக்கு அபராதம்!

மேல் மாகாணத்துக்குட்பட்ட அனைத்து தனியார் பேருந்துகளில் பயணிக்கின்ற பயணிகள் செல்லுபடியான பயணச்சீட்டுகளைப் பெறுவது கட்டாயமாகும் என மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறைக்கு ஒத்துழைப்பை வழங்கத் தவறும் பயணிகள் மற்றும் நடத்துநர்களுக்கு எதிராக அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும் பயணச்சீட்டுகளை வழங்கத் தவறும் நடத்துநர்களுக்கு ரூ.750 அபராதம் விதிக்கப்படும் என...

குடிநீர் போத்தல் அதிக விலைக்கு விற்ற தனியார் நிறுவனத்துக்கு அபராதம்!

அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொழும்பு துறைமுக நகரத்தில் அமையப்பெற்றுள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 70 ரூபாய் குடிநீர் போத்தலை 200 ரூபாய்க்கு நுகர்வோருக்குக் குறித்த நிறுவனம் விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் ரூபாய் 500,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

அதிக கட்டணம் வசூலித்தமைக்காக மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு அபராதம் விதிப்பு!

முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனை அறிக்கைக்கு அதிக கட்டணம் வசூலித்த மல்வானை பகுதியில் உள்ள மருத்துவ ஆய்வகம் ஒன்றுக்கு 500,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் மஹர நீதவான் நீதிமன்றத்தால் நேற்று (02) விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மருத்துவ ஆய்வகம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. முழுமையான இரத்த எண்ணிக்கை...

மனித பாவனைக்கு உதவாத குளிர்பானங்கள் விற்பனை – மக்கள் அவதானம்..!

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை 01 பகுதியில் மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் குளிர்பானங்கள் இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து அவை சுகாதார வைத்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த தகவலுக்கு அமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத்தின் ஆலோசனையின் பேரில் சம்மாந்துறை 01 பகுதிக்கு பொறுப்பான பொதுச் சுகாதார...

அரிசி மோசடி தொடர்பில் 700 சுற்றிவளைப்புக்கள் பதிவு!

இவ்வாண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் அரிசி தொடர்பான சுமார் 700 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். அதன்படி, இவ்வாண்டில் மாத்திரம் பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 2500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு நாடளாவிய ரீதியில் பல்வேறுபட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் இந்த சுற்றிவளைப்புகள் தொடர்பில் வழக்கு தொடரப்படுவதாகவும்...

இலங்கையில் உள்ள இந்தியன் வங்கிக்கு அபராதம்..!

இலங்கையில் உள்ள இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது. 2006 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க இலங்கை நிதிப் பரிவர்த்தனை அறிக்கைச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்காதமை தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கியின் நிதி உளவறிதல் பிரிவு அபராதம் விதித்துள்ளது. அதற்கமைய, தங்களுக்கு இரண்டு மில்லியன் ரூபாய் அபராதமாக...

அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்றுடன் நிறைவு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க வேண்டுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் சில குறைபாடுகள் காரணமாக அஞ்சல் வாக்குகளுக்கு விண்ணப்பிக்காதது அல்லது விண்ணப்பங்களை...

ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடியான வாக்கு செலுத்துபவர்களுக்கு அபராதம்….!

ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடியான வாக்குகளை அல்லது அதற்கு ஆதரவளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக குலரத்னவின் கூற்றுப்படி, தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு நபருக்கு 12 மாதங்களுக்கும் மேலான சிறைத்தண்டனை அல்லது 2 இலட்சம் ரூபா...

தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு விடுத்த அறிவித்தல்…!

ஏற்கனவே பதிவான வாக்குகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு அறிவித்துள்ளது. சமூக ஊடக தளங்களில் இருந்து இடுகையை அகற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றியவர்கள் மற்றும் பல்வேறு தளங்களில் பகிர்ந்தவர்கள் மீது...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img