மேல் மாகாணத்துக்குட்பட்ட அனைத்து தனியார் பேருந்துகளில் பயணிக்கின்ற பயணிகள் செல்லுபடியான பயணச்சீட்டுகளைப் பெறுவது கட்டாயமாகும் என மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறைக்கு ஒத்துழைப்பை வழங்கத் தவறும் பயணிகள் மற்றும் நடத்துநர்களுக்கு எதிராக அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் பயணச்சீட்டுகளை வழங்கத் தவறும் நடத்துநர்களுக்கு ரூ.750 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை (அக்டோபர் 1) முதல், பயணச்சீட்டுகளின்றி பயணம் செய்யும் பயணிகள் மீது ரூ.100 அபராதம் மற்றும் பயணக் கட்டணத்தின் இருமடங்கு தொகை வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இந்த அபராத தொகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.

அதேவேளை, 2002ம் ஆண்டு விதிமுறைகளின் கீழ் பயணிகள் முச்சக்கர வாகனங்களின் பதிவு மற்றும் உரிமம் பெறும் நடைமுறைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், அனைத்துப் பயணிகள் முச்சக்கரவண்டிகளும் போக்குவரத்து ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டு செல்லுபடியான அனுமதிகளை வைத்திருக்க வேண்டும் எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here