Thursday, July 16, 2026
No menu items!

அமெரிக்கா

“என் வெற்றிக்கு டிக்டொக் காரணம்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன் வைரல் பதிவு!

அமெரிக்கத் தேர்தலில் தன்னை வெற்றிபெற டிக்டொக் செயலி உதவியது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். டிக்டொக்கை அமெரிக்காவில் தடை செய்யும் முயற்சி தொடர்ந்து நிலுவையில் இருக்கும் வேளையில், ட்ரம்ப் இவ்வாறு விலகிய கருத்தை வெளியிட்டுள்ளார். "நான் டிக்டொக்கை விரும்புகிறேன். அது எனக்கு வெற்றியைத் தந்தது" என ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தச் சூழ்நிலையில், டிக்டொக் செயலியை...

ChatGPT உரையாடல் காரணமாக அமெரிக்காவில் தாயைக் கொலை செய்த சம்பவம்; தொழில்நுட்பம் மனித இனத்தினை அழிக்கும் அபாயம்!

சட்ஜிபிடி (ChatGPT) எனும் தொழில்நுட்ப செயலியின் அறிவுரையின் கீழ் நபர் ஒருவர் தனது தாயைக் கொலை செய்து விட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வந்த நபர் ஒருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். சட்ஜிபிடிக்கு (ChatGPT) பெயரிட்டு,...

அமெரிக்கா 50% வரி விதித்ததால் இந்தியா-அமெரிக்க வர்த்தக உறவில் குழப்பம்!

அமெரிக்கா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்ததைத் தொடர்ந்து, இருநாட்டு வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பல தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இருநாடுகளுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவர் தனது Truth Social பதிவில், “எனது நண்பர்...

அமெரிக்கா–ஜப்பான் வர்த்தக ஒப்பந்தம்: 15% வரி மற்றும் 550 பில்லியன் டொலர் முதலீடு!

அமெரிக்கா – ஜப்பான் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜப்பான் பொருட்களுக்கும் 15 சதவீத வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஓட்டோமொபைல், உதிரிபாகங்கள், விண்வெளி தயாரிப்புகள், மருந்துகள் மற்றும் உள்நாட்டில் கிடைக்காத இயற்கை வளங்களுக்கு...

கின்னஸ் சாதனை படைத்த PEARL என்ற கோழி!

அமெரிக்காவைச் சேர்ந்த PEARL என்ற கோழி கின்னஸ் சாதனையொன்றைப் படைத்துள்ளது. வழக்கமாக கோழிகள் 5-10 வருடங்கள் உயிர்வாழும் நிலையில், PEARL என்ற கோழி 14 ஆண்டுகள் வாழ்ந்து வருகின்றது. இதற்கமைய உலகின் மிக வயதான கோழி என்ற கின்னஸ் சாதனையைக் குறித்த கோழி தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

அமெரிக்க வரி நடவடிக்கைக்கு எதிராக பிரேசில் உலக வர்த்தக அமைப்பில் நடவடிக்கை!

அமெரிக்காவால் பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் (WTO) ஆலோசனை நடத்த பிரேசில் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரியை பல விதிவிலக்குகளுடன் விதித்தார். ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் (WTO)...

உலக நீச்சல் சம்பியன்ஷிப்பில் சாதனை படைத்த லோன் மாசண்ட்!!

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக நீச்சல் சம்பியன்ஷிப்பில், 200 மீற்றர் தனிநபர் மெட்லி நீச்சலில் பிரான்ஸ் வீரர் லோன் மாசண்ட் உலக சாதனை படைத்துள்ளார். அரையிறுதி சுற்றில் பந்தய இலக்கை 1 நிமிடம், 52.61 விநாடிகளில் கடந்த அவர், 14 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன் 2011  இல் அமெரிக்காவின் ரயான் லாக்டே 1 நிமிடம்,...

ரஷ்ய எல்லையில் இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்கள் – டிரம்ப் உத்தரவு..!!

ரஷ்ய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (01) உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முயற்சிகள் பலனளிக்காததால், ரஷ்யா மீது பொருளாதார தடையை அமெரிக்க அரசு விதித்து வருகின்றது. ரஷ்யாவிடம் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது. டிரம்பின் எச்சரிக்கையை மீறி...

இலங்கை–அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளில் கனிவான வெற்றி..!!

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இலங்கை தனது விரும்பிய இலக்குகளை அடைந்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் வைத்தியர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். அமெரிக்கா வரிகளை 20% ஆகக் குறைப்பது குறித்து இன்று (01) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். பிராந்தியத்தில் உள்ள போட்டியாளர்களைப் போன்ற ஒரு கட்டண விகிதத்தை அடைவதே இந்தப்...

20 சதவீதமாக வரியை குறைக்கும் அமெரிக்கா..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் மீதான புதிய வரிகள் தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை 20 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி முதல் அமுலாகிறது. இந்த நிலையில், பங்களாதேஷ் மீது 20 சதவீதமும், கம்போடியா மீது 19...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img