அமெரிக்கத் தேர்தலில் தன்னை வெற்றிபெற டிக்டொக் செயலி உதவியது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
டிக்டொக்கை அமெரிக்காவில் தடை செய்யும் முயற்சி தொடர்ந்து நிலுவையில் இருக்கும் வேளையில், ட்ரம்ப் இவ்வாறு விலகிய கருத்தை வெளியிட்டுள்ளார். “நான் டிக்டொக்கை விரும்புகிறேன். அது எனக்கு வெற்றியைத் தந்தது” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், டிக்டொக் செயலியை தடை செய்யும் முடிவுகள் மற்றும் அதன் எதிர்காலம் தொடர்பாக, ட்ரம்ப் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்குடன் கலந்துரையாடவிருக்கிறார் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும், டிக்டொக்கை அமெரிக்க நிறுவனம் வாங்க வேண்டிய கடைசி நாளான ஒப்பந்தக் காலக்கெடுவை நான்காவது முறையாக ட்ரம்ப் நீட்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






