Saturday, September 26, 2026
No menu items!

அறிக்கை

சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரச கணக்காய்வாளர் நாயகம் கடந்த காலங்களில் வெளியிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிக்கைகளில் சுமார் 95 வீதமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தவறியுள்ளதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அத்தகைய செயற்பாடானது நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் வீண் விரயத்தை வலுப்படுத்துவதற்கான ஊக்குவிப்பாக அமையும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் விடுத்துள்ள...

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு !

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சகத் தலைவர்கள் பொது நிதிக்கான பாராளுமன்றக் குழுவிடம் தெரிவித்தனர். பொது நிதி தொடர்பான பாராளுமன்றக் குழு, தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கடந்த 28 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் கூடியபோதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், நெல் கொள்முதல் செய்வதற்காக...

கலாசார நிலையப் பெயர் மாற்றம் தொடர்பில் ஐங்கரநேசன் ஆதங்கம்..!

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் கலாசார பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டதும் தனித்துவமிக்கதுமான யாழ்ப்பாண கலாசார நிலையம் 2023 பெப்ரவரி 01ஆம் திகதி மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது. திறப்புவிழாக் கல்வெட்டில் அழியாத எழுத்துகளால் அழகாகப் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம் இது. ஆனால், மக்களுக்கு உரித்தாக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கூடக் கடக்காத நிலையில் அம்மக்களின் அபிப்பிராயங்கள் எதுவும் பெறப்படாது யாழ்ப்பாண...

ஜனாதிபதியின்  சீன விஜயத்தின் இறுதி நாள் இன்று!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் இறுதி நாள் இன்றாகும். இதன்படி, ஜனாதிபதி இன்றைய தினம் சீனாவின் முன்னணி உற்பத்தி தொழில்சாலைகளுக்கு செல்லவுள்ளார். இதன் ஒரு கட்டமாக வறுமையை ஒழிப்பதற்கு முன்னூதாரணமான சீன கிராமம் ஒன்றையும் ஜனாதிபதி பார்வையிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் சிச்சுவான் பிராந்திய கொமினியுஸ்ட் கட்சியின் செயலாளருடன் இன்றைய தினம் ஜனாதிபதி...

ஊடக சுதந்திரம் – டலஸ் அழகப்பெருமவுக்கு பதிலடி கொடுத்த நளிந்த ஜயதிஸ்ஸ..!

ராஜபக்சக்களின் அரசாங்கத்தில் இரும்புக் கரம்கொண்டு ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டபோது, அந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தராக இருந்த டலஸ் அழகப்பெரும, ஊடக சுதந்திரம் பற்றி பேசுவதைக் காட்டிலும் முரண்பாடானது வேறெதுவும் இல்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், தாமும் அறிக்கையொன்றை வெளியிட்டு அவர்...

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூல மீளாய்வு அறிக்கை நிதி அமைச்சிடம் கையளிப்பு!

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தமது அறிக்கையை நிதி அமைச்சிடம் கையளித்துள்ளது. நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தலுக்காக 2023 ஆம் ஆண்டு இந்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. இதற்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 அடிப்படை உரிமைகளை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது...

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பில் விசேட கவனம் – நிதியமைச்சு..!

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயற்பாட்டை வினைத்திறனாக மேம்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள நிதியமைச்சு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களத்தினூடாக குறித்த திட்டத்துக்கான வசதிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை வணிக சபையுடன் நிதி பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும கலந்துரையாடியுள்ளதாகவும்...

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் அமைச்சு வெளியிட்ட அறிக்கை..!

சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பில் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர் மாதத்தின் பின்னர் கொடுப்பனவு குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யான மற்றும் அடிப்படையற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுநீரக நோயாளர்களுக்கான 7,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்வரும்...

இலங்கையின் பொருளாதாரத்திற்கு அதிகூடிய பங்களிப்பை வழங்கிய மேல் மாகாணம்..!

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணத்தினால் அதிகூடிய பங்களிப்பை வழங்க முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன் பெறுமதி 43.7% என மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பங்களிப்பு சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் இந்த பங்களிப்பில் சேவை மற்றும் கைத்தொழில்...

IMF இனால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தைச் செயற்படுத்தி வரும் இலங்கை!

இலங்கை அதிகாரிகள் தங்களது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் நிலைத்து நின்று பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரிக்கப்படும் பொருளாதார...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு முடிவுகள் வெளியானது

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீளாய்வுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை பரீட்சைகள், திணைக்களத்தின்...
- Advertisement -spot_img