அரச கணக்காய்வாளர் நாயகம் கடந்த காலங்களில் வெளியிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிக்கைகளில் சுமார் 95 வீதமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தவறியுள்ளதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

அத்தகைய செயற்பாடானது நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் வீண் விரயத்தை வலுப்படுத்துவதற்கான ஊக்குவிப்பாக அமையும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காலம் தாழ்த்தாது அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் மோசடியை எதிர்ப்பது குறித்து சமூகத்திற்குள்ளும் அரசியல் மட்டத்திலும் ஆழமான விவாதங்கள் இடம்பெற்றன.

அதன் ஊடாக விடுக்கப்பட்ட அழுத்தங்களின் பிரகாரம் கையூட்டல் மற்றும் ஊழல் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டன.

எனினும், நாடு எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்திற் கொள்ளும் போது அது போதுமானதாக இல்லை என்பதே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்ததாகவும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here