Saturday, September 26, 2026
No menu items!

அறுவடை

2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்திற்கான அரசின் நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம்!

2025 சிறுபோகத்திற்கான அரசின்  நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்காக 6,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று (2025.09.15) அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5,288 மில்லியன்கள் ஏற்கனவே செலவிடப்பட்டு நெல் சந்தைப்படுத்தல் சபையால் 16 மாவட்டங்களில் 43,891 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் தற்போது அறுவடை இடம்பெற்று வரும் பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும்...

தேங்காயின் விலையில் அதிகரிப்பு!

நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் , மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் அறுவடை 500 மில்லியனை தாண்டும்...

வயல் வெளிகளில் சஞ்சரிக்கும் காட்டு யானைகள் – பிரதேசவாசிகளின் கோரிக்கை..!

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டங்களில் காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் அவதானித்துள்ளனர். பெரும்போக நெற்பயிர்செய்கை அறுவடை முடியும் தறுவாயிலில் பட்டியாக நூற்றுக்கு மேற்பட்ட யானைகளை காணலாம். அவற்றுள் அதிகமானவை குட்டி யானைகளாக காணப்படுகின்றதையும் அவதானிக்க முடிந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இதனை பார்வையிட மக்கள் கூட்டமும் வருகை தருகின்றனர். காட்டுயானைகள் கூட்டமாக இருப்பதனால் மக்களுக்கு பாதிப்பு இல்லை...

உப்பு விலையில் அதிகரிப்பா?

ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து அதே விலையில் உப்பை கொள்வனவு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று லங்கா உப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் சண்முகநாதன் தெரிவித்தார். அதன்படி, ஏப்ரல் முதல் வாரத்திற்குள், ஒரு கிலோ உப்பு கட்டிகள் கொண்ட பாக்கெட்டை ரூ.120க்கும், 400 கிராம் உப்பு தூள் பாக்கெட்டை ரூ.100க்கும் நுகர்வோர் வாங்க முடியும்...

வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் அதிகரிக்கும் வீதி விபத்து!

வீதியோரங்களில் நெல் உலர விடுவதனால் தொடர்ச்சியாக விபத்து சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. தற்போது நெல் அறுவடை இடம்பெற்று வருவதனால் மக்கள் வீதியோரங்களில்  எவ்வித பாதுகாப்பு சமிக்ஞை இன்றி நெல்லை உலரவிடுகின்றனர். இதனால் விபத்து சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் பாதுகாப்பு சமிக்ஞை இல்லாமல் நெல் உலரவிடப்பட்டதனால் கடந்த இரு தினங்களில் இருவர் விபத்துக்குள்ளாகி...

காட்டு யானைகளின் அட்டகாசம் – தெய்வாதீனமாக உயிர் தப்பிய தாயும் மகளும்!

தற்போது செய்கையிடப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மைச் செய்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்டு வரப்படுகின்றன. அண்மையில் ஏற்பட்டிருந்த மழை வெள்ளத்தில் அழிந்துபோய் மீதமாகவுள்ள தமது வாழ்வாதாரம் தொழிலான வேளாண்மைச் செய்கையில் எஞ்சியுள்ளதை அறுவடை செய்வதற்கு முன்னமே காட்டு யானைகள் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அதற்காக வேண்டி இரவு முழுவதும் காட்டு யானைகளிடமிருந்து...

நெல்லுக்கான நிர்ணய விலை தொடர்பில் விவசாயிகள் கவலை..!

அறுவடை முடிவடையும் நிலை எட்டியுள்ள நிலையிலும் இதுவரையில் நெல்லுக்கான நிர்ணய விலை அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்படாதது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் மேலும் தெரிவிக்கையில், இவ்வருடம் என்றும் இல்லாதவாறு கடுமையான நோய் தாக்கம் மற்றும் வெள்ள அனத்தம் காரணமாக விவசாயிகள் ஏக்கர் 10 மூடைகளுக்கு உட்பட்டஅறுவடையினையே மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லினை தமது செலவினத்தை...

தொடரும் விவசாயிகளின் அவலம்..!

என்றும் இல்லாதவாறு இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெல் வயல்கள் வெள்ள அனர்த்தங்களினால் அழிவடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலையில் தொடர்ச்சியாக வெள்ள நிலமை காரணமாக தமது உணவுத்தேவைக்காவது அரிசியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் கையினால் நெல் அறுவடை செய்து வருகின்றனர். அத்துடன் தமது தோள்களிலே...

உச்சத்தை தொடும் தேங்காயின் விலை ..!

எதிர்காலத்தில் சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாவாக உயரக்கூடும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர். கடந்த சில மாதங்களாக, உள்ளூர் சந்தையில் தேங்காய்கள் தொடர்பாக பல சிக்கல்கள் எழுந்துள்ளன, மேலும் வருடாந்த தேங்காய் அறுவடை கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய இலங்கை தெங்கு கைத்தொழில் அரசாங்கத்திடம்...

நெல் கொள்வனவு செய்வதற்கு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு ரூபா 5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, நெல்லுக்கான சான்று விலை விரைவில் அறிவிக்கப்படும் என உறுதியளித்தார். நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு நிலவுவதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திஸாநாயக்க, இந்த பற்றாக்குறைக்கு முன்னர் வருடாந்தம் சுமார்...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு முடிவுகள் வெளியானது

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீளாய்வுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை பரீட்சைகள், திணைக்களத்தின்...
- Advertisement -spot_img