2025 சிறுபோகத்திற்கான அரசின்  நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்காக 6,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று (2025.09.15) அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 5,288 மில்லியன்கள் ஏற்கனவே செலவிடப்பட்டு நெல் சந்தைப்படுத்தல் சபையால் 16 மாவட்டங்களில் 43,891 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும் தற்போது அறுவடை இடம்பெற்று வரும் பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் எஞ்சிய சிறுபோக அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய, அரசின் உத்தரவாத விலையில் தொடர்ந்தும் 2025 சிறுபோகத்தில் விவசாயிகளிடமிருந்து  நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மேலதிக நிதியொதுக்கீட்டுக்கு விவசாய, காலந்டை வளங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here