Monday, June 8, 2026
No menu items!

இந்திய ஊடகங்கள்

மக்காவுக்கு புனிதபயணத்திற்காக பயணித்த பேருந்து விபத்து- 42 இந்தியர்கள் பலி!

சவுதி அரேபியாவில் மக்காவுக்கு புனிதபயணத்திற்காக பயணித்த பேருந்து, டீசல் பாரவூர்தியுடன் மோதி விபத்திற்குள்ளாகியதில் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களும் ஒரு படகும் இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் 15 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்றதாகவும், தற்போது இராமநாதபுரம் மீன்வளத் துறைமுகத்தில் தங்கியிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மீனவர்கள் தாங்கள் ஒரு விபத்தை சந்தித்ததாகவும், பின்னர் மற்றொரு மீன்பிடிக் கப்பல் மூலம் இந்தியாவின் இராமநாதபுரத்திற்கு...

அதானி நிறுவனத்துடன் தொடர்ந்தும் விவாதித்து வரும் இலங்கை அரசாங்கம்!

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்து அதானி தொடர்ந்து விவாதித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்புடைய திட்டங்கள் தொடர்பாக அதானி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே இன்னும் விவாதங்கள் நடந்து வருவதாக இந்தியாவின் "தி இந்து" செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தத் திட்டங்களுக்கான கட்டணங்கள் தொடர்பாக பரஸ்பர உடன்பாட்டை எட்டுவதற்கு பொருத்தமான விவாதங்கள் நடைபெற்று...

வவுனியாவைச் சேர்ந்த நால்வர்  இராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர்!

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் கடல் வழியாகத் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கையர்கள் நால்வர் இராமேஸ்வரத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கணவன் , மனைவி மற்றும் இரு பிள்ளைகளே இவ்வாறு இராமேஸ்வரத்தைச் சென்றடைந்துள்ளனர். குறித்த நால்வரையும் இந்தியக் கடலோர காவல்படை மீட்டு இராமேஸ்வரம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தனுஷ்கோடியில் உள்ள அரிசல்முனை அருகே படகொன்றில் இவர்கள்...

கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்கள் எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த 32 இந்திய மீனவர்களும் நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் நேற்றிரவு மன்னார் நீதிவான் முன்னிலையில்...

இஸ்ரோவின் புதிய தலைவர் நியமனம்!

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அவர் எதிர்வரும் 14ஆம் திகதி பதவியேற்பார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 24 வயதுடைய இளைஞன்….!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த இளைஞன், சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. அவருடன் நேரடித் தொடர்பிலிருந்த 26 பேர் கேரளாவின் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்...

உத்தர் பிரதேஷில் பரிதாபமாக பலியான பலர்…!!

இந்தியாவின் உத்தர பிரதேஷ் மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில்  ஆன்மீக சொற்பொழிவின் பின்னர் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி 116 ​பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 116 பேரில் 108 பெண்களும் 7 சிறுவர்களும் அடங்குவதாகவும் மேலும் 18 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. துறவி ஒருவரின் மடத்தில் அனைத்து மதத்தினரின் மனிதநேய மங்கள சந்திப்பு எனும் பெயரில்...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img