Monday, September 28, 2026
No menu items!

இராமநாதன் அர்ச்சுனா

நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது; குற்றம் சுமத்திய எ.ம்.பி அர்ச்சுனா!

தமது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகத் தாம் முறைப்பாடு செய்துள்ள போதிலும் அது தொடர்பில் விசாரிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். தமக்கு உரையாற்றுவதற்கு அரசாங்க தரப்பு நேரம் ஒதுக்கவில்லை என்றும் தமது முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதில் காலதாமதம் ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். உடனடியாக இந்த பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்...

மீண்டும் சிறை செல்லும் அர்ச்சுனா எம்.பி!

போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று (20) இரவு அனுராதபுரம் பொலிஸ் பிரிவின் கல்வல சந்திப் பகுதியில் நேற்று (20) இரவு போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்ததாக...

இராமநாதன் அர்ச்சுனாவின் மனு விசாரணை ஒத்திவைப்பு!

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் எம்.கோபல்லவ முன்னிலையில்...

பறிக்கப்படுகிறதா அமைச்சர் அர்ச்சுனாவின் உரிமை!

நாடாளுமன்றில் தமக்கு உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாக யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று இரண்டாவது முறையாகவும் சபையில் தெரிவித்தார். நேற்றைய தினமும் இந்த விடயம் தொடர்பில் அவர் நாடாளுமன்றில் உரையாற்றியிருந்தார். சபாநாயகர் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதனிடையே இன்றைய...

சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ள எம்.பி அர்ச்சுனா..!

நாடாளுமன்றில் தமக்கு உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாக யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று சபையில் தெரிவித்தார். சபாநாயகர் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடியாக தீர்த்து வைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். அவர் நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருக்கும் நிலையில்...

மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தும் அர்ச்சுனா எம்.பி..!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்களின் சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகளை யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர் சம்மேளன அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர்அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் உள்ளிட்ட சம்மேளன பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். இதன் போது மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பாக...

அர்ச்சுனா எம்.பிக்கு கடும் எச்சரிக்கையுடன் பிணை..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் சரணடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்று அதன் பணிப்பாளர் வைத்தியர் ரீ. சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பாக, காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சரணடைந்தார். இதன்போது அவர் கடும் எச்சரிக்கையுடன் பிணையில் செல்ல...

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான முறைப்பாடு இன்று நீதிமன்றில் ..!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினர் இன்றையதினம் (11.12.2024) நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம்...

Dr.சத்தியமூர்த்திக்கு மிரட்டல் விடுத்த அர்ச்சுனா எம்.பி..!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீண்டும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவாரெனின், வாசலிலேயே வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (10.12.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...

அர்ச்சுனா எம்.பி -க்கு எதிரான விசாரணை ஆரம்பம்..!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த....
- Advertisement -spot_img

Latest News

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை...
- Advertisement -spot_img