Tuesday, July 28, 2026
No menu items!

இலங்கை தமிழரசு கட்சி

தையிட்டி விகாரை தொடர்பில் அரசாங்கத்தின் பதில் என்ன? கேள்வி எழுப்பிய MP. சிறிதரன்!

தையிட்டி விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்குமாயின் அதற்காக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி எழுப்பினார். வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அவர் இந்த கேள்வியை முன்வைத்தார். அத்துடன் தங்களின் காணியைக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்...

மட்டக்களப்பில் அதிகரித்துவரும் வாள் வெட்டு சம்பவங்கள்; தீர்வுகாண வேண்டுமென எம்.பி.சாணக்கியன் கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் விரைவில் தீர்வுகாணப்பட வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் குறித்த விடயத்தினை முழுமையாக முன்வைக்க முடியாத வகையில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. நாடாளுமன்ற...

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் இல்லை; சுமந்திரன்!

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எந்தவொரு முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமது தரப்பு தொடர்ந்தும் கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.   <!-- -->

ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள இலங்கை தமிழரசு கட்சி!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் எவ்வாறு நிர்வாகத்தை ஏற்படுத்துவது என்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தலைவர் இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கனேடிய தூதுவரோடு கலந்துரையாடல்..!

இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக்வோல்ஸ் அவர்களுக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் இளம் அரசியல் உறுப்பினர்களுக்குமிடையேயான சந்திப்பு ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதன்போது நடைமுறை அரசியல் விடயங்கள் குறித்தும், விசேடமாக தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் சம்பந்தமாகவும், தற்போது கனடா அரசினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், வடக்கு கிழக்கில் இன்னும் பல அபிவிருத்தி...

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் அரசாங்கத்தினை விமர்சித்த  MP சுமந்திரன் !

அரசியல் கையூட்டலாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை இதுவரையில் அரசாங்கம் மறைத்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்  மாவை சேனாதிராஜா  காலமானார்!

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82வது வயதில் காலமானார். தலையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குச் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்றிரவு (29) காலமானார். இறுதிக்கிரியைகளை மாவிட்டபுரத்தில் நடத்துவதற்குத்...

சுமந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையால் எழுந்துள்ள சர்ச்சை..!

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் உட்பட...

நாடாளுமன்றில் கூட்டாக செயற்பட தமிழரசு கட்சிக்கு அழைப்பு..!

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாடாளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்கு இலங்கை தமிழரசு கட்சிக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில் எழுத்து மூலமான அழைப்பு கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் நேற்றையதினம் (1/25/2025) வழங்கினார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த பாராளுமன்றத் தேர்தல்...

இலங்கை நிதியமைச்சரின் கருத்துக்கு யோதிலிங்கம் கண்டனம்..!

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று இலங்கை நீதி அமைச்சர் தெரிவித்த கருத்திற்கு  அரசியல் ஆய்வாளரும்,  சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான சியாஜோதிலிங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இன்று அவர் யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர்  கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் இலங்கை நீதி அமைச்சர்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img