Tuesday, November 10, 2026
No menu items!

இலங்கை

HIV நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் HIV தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் ரீதியாகப் பரவும் தொற்றுநோய்/எச்.ஐ.வி.யை தடுப்பதற்கான விழிப்புணர்வு திட்டம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் (ஜனவரி முதல் மார்ச் வரை) மொத்தம் 230 HIV வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும், 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் HIV தொடர்பான 10 இறப்புகள்...

100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் தேசிய திட்டம்!

100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் தேசிய திட்டத்தின் முதல் கட்டமான ‘Dream Destination’, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இன்று (02) தல்பே ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் ரயில் நிலையங்களை உலகத் தரத்துடன் ஒப்பிடத்தக்க வகையில் புதிய அடையாளத்துடன் மேம்படுத்துவதற்காக, அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்களின் கூட்டு...

6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் – ரணில்!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி இந்த விசேட உரையினை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த 26 ஆம்...

ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்..!!

பேராதனையிற்கும், கண்டிக்கும் இடையில் ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக, எதிர்வரும் செப்டெம்பர் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் பேராதனைக்கும் கண்டிக்கும் இடையில் இரண்டு ரயில்கள் மட்டுமே சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட நாட்களில் டிக்கிரி மெனிகே மற்றும் உடரட மெனிகே ஆகிய ரயில்கள் மட்டுமே இயங்கும்...

இன்று நாட்டிற்கு வரும் இந்தோனேசியாவில் கைதான குற்றவாளிகள்!!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரும் இன்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அவர்களை அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு இன்று (30) காலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றது. இந்நிலையில், கைது செய்யபட்ட ஐவரையும், இலங்கையில் இருந்து சென்ற பொலிஸ் குழு பொறுப்பேற்ற நிலையில், அவர்கள் விமானத்தில் இலங்கை...

யாழில்.கிட்டுப் பூங்கா முன்றலில் இருந்து செம்மணி வரை மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி..!!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதிகோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் ஒருபகுதியாக யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்கா முன்றலில் இருந்து செம்மணி வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது. அந்நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிட்டு பூங்கா முன்றலில் இருந்து இன்றைய தினம் காலை 11 மணியளவில் பேரணியாக சென்று,...

ஸ்கந்தவரோதயா கல்லூரியில் நடைபெற்ற “மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு” நிகழ்வு!

ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 2000ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களின் "மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு" என்ற நிகழ்வு இன்றையதினம் கல்லூரி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்கந்தன் ஆலயத்தில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2000ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்கள் தமக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை...

யானை தாக்கி இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு..!!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் யானை தாக்குதலுக்குள்ளாகி  நபரொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று சனிக்கிழமை(30) காலை இடம்பெற்றுள்ளது. தம்பியன் என்றழைக்கப்படும் தங்கநகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரவு வயலுக்குச் சென்றுவிட்டு காலை வீடு திரும்பும் வேளையில் தோட்டம் ஒன்றிற்குள் மறைந்திருந்த யானை குறித்த நபரை தாக்கியதாக விசாரணைகளில்...

கழுத்தை நெரித்து கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது!!

தெஹிவளை பொலிஸ் பிரிவில் கடற்கரை வீதியில் ஒருவரை கழுத்தை நெரித்து கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை 2025.05.10 அன்று இடம்பெற்றுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதன்படி, தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த...

துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது!!

மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டாவை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்தச் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார்...
- Advertisement -spot_img

Latest News

சீரற்ற காலநிலை; ஹட்டன் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

மத்திய மலைநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் பெய்துவரும் கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹட்டன் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்...
- Advertisement -spot_img