Monday, November 9, 2026
No menu items!

இலங்கை

வங்கி அட்டைகள் மூலம் வழக்கு கொடுப்பனவுகளை ஏற்கும் வசதி – உயர் நீதிமன்றத்தில் புதிய திட்டம்!

இலங்கையின் நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலின் புதிய கட்டமாக, வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மற்றும் இணையவழி பரிவர்த்தனைகள் மூலம் ஏற்கும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில், பிரதம நீதியசரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள், அபராதம், வழக்கு...

மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளை மீண்டும் தொடங்க சீனாவிடம் கடன் பெறும் இலங்கை!

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நிகரான சீன யுவான் மதிப்பிலான கடனை இலங்கை பெறவுள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தொலைபேசி நேர்காணலில் இதனைத் தெரிவித்ததாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் இந்த மாத இறுதியில் மீண்டும்...

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்!

இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலானது பெங்களூரிலிருந்து வருகை தந்துள்ள, இந்தியாவின் மீன்பிடித்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மீன்வளத்துக்கான மத்திய கடலோர பொறியியல் நிறுவனத்தினர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்...

இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பாக பிரித்தானியா சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாரிய புதைகுழிகளை சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப விசாரணை செய்வது மிக அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தன்னிச்சையான தடுப்புக்காவல், காவலில் மரணங்கள், மனித உரிமை பாதுகாவலர்களுக்கு...

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று முதல் ஆரம்பம்!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது. தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹொங்கொங் அணியை எதிர்கொண்டு களமிறங்குகிறது. இந்த தொடர் செப்டம்பர் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், மொத்தம் எட்டு ஆசிய அணிகள் சாம்பியன் பட்டத்தை நோக்கி மோதவுள்ளன. இலங்கை அணி தமது பிரயாணத்தை எதிர்வரும் சனிக்கிழமை பங்களாதேஸ்...

ஹராரேவில் சிம்பாப்வேயை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இலங்கை!

ஹராரேவில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், கமில் மிஷாரவின் ஆட்டமிழக்காத 73 ஓட்டங்களின் பலத்தால் இலங்கை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் சிம்பாப்வேயை தோற்கடித்தது. இந்த வெற்றியால், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 191...

சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் பிரதமர்..!!

பிரதமர் ஹரிணி அமரசூரிய அடுத்த மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சக பணிப்பாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். சீனா அவ்வப்போது ஏனைய நாடுகளுடன் தமது மூலோபாய உறவுகளை புதுப்பித்துக்கொள்ளும்....

எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அஞ்சலிக்காக தங்காலை நகர சபையில்..!!

எல்ல - வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகரசபை ஊழியர்களின் சடலங்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரையில் 10 பேரின் சடலங்கள் நகர சபைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (04) இடம்பெற்ற இவ் விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர்...

இன்றைய நாளுக்கான வானிலை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். கிழக்கு , ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்...

பேருந்து விபத்து குறித்து வெளியான முக்கிய தகவல்..!!

எல்ல பேருந்து விபத்தில் உயிர் பிழைத்த பயணி ஒருவர், சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சாரதி பிரேக் செயலிழந்ததாகக் கூறியதாகத் தெரிவித்துள்ளார். குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனருடன் உரையாடலில் ஈடுபட்டதாகவும், அப்போது ஒரு வளைவில் செல்லும்போது பிரேக் செயலிழந்ததாக சாரதி தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார். சாரதியின் கூற்றைக் கேட்டு பேருந்து நடத்துனரும், ஏனைய...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img