நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பல முக்கிய விடயங்கள் வெளிச்சம் பெற்றுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவர் தலைமறைவாக இருந்த காலப்பகுதியில் உதவி புரிந்தமை தொடர்பாக, கிளிநொச்சி உள்ளிட்ட வடபகுதி பகுதிகளைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி, தற்போது 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிறகு, இஷாரா செவ்வந்தி மித்தெனிய, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல இடங்களில் தங்கியிருந்ததாகவும், அந்த இடங்களில் அவருக்கு உதவி செய்தவர்களை காவல்துறை அடையாளம் கண்டு கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இஷாரா செவ்வந்தி தங்கியிருந்த இடங்களுக்கு அவரை அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here