Saturday, July 18, 2026
No menu items!

இஸ்ரேல்

லெபனானின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்…!

லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். பால்பெக் நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில்ட தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் காரணமா மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கிழக்கு லெபனானில், இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால்...

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொலை!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெற்கு லெபனானில் உள்ள சிடன் நகருக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். அதேநேரம் காசாவில் நேற்றைய தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 132 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தெற்கு லெபனானில் இடம்பெற்ற மோதலில் 33 இஸ்ரேல் இராணுவத்தினர் உயிரிழந்ததாக இஸ்ரேல் ஊடகங்கள்...

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவர் நியமனம்!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் உயிரிழந்ததையடுத்து புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில்,  ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதுடன் இயக்கத்தின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் துணை பொதுச் செயலாளரான ஷேக் நயீம் காசிம் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்…!

ஈரான் மீது இன்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் இராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டுள்ள 2ஆவது வீடியோ பதிவில், "இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடியை நாங்கள் முடித்துவிட்டோம் என்பதை இப்போது என்னால்...

இஸ்ரேல் பிரஜைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுத்த மூவர் கைது!

இலங்கையில் இஸ்ரேல் பிரஜைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இதுவரை மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர், இஸ்ரேலியர்கள் அல்லது வேறு எவருக்கும் எதிரான தாக்குதல்கள்...

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவர் உட்பட நால்வர் உயிரிழப்பு!

தெற்கு பெய்ரூட்டில் உள்ள அரச மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஃபிக் ஹரிரி பல்கலைக்கழக மருத்துவமனையின் வாகன தரிப்பிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இந்த தாக்குதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேலினால்...

தீய சக்தி அழிந்துவிட்டது ; இஸ்ரேல் பிரதமர்!

ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் உயிரிழந்தது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஹனியே கொல்லப்பட்டதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக பொறுப்பேற்ற யாஹ்யா சின்வார் காஸா இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார்...

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் இலங்கையர்கள் இருவர் காயம்…!

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையைச் சேர்ந்த இலங்கையர்கள் இருவர் காயமடைந்தமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளது. டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிகாரிகள் இருவர் காயமடைந்தமை குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆசிய பசுபிக் பிரிவின்...

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்; இலங்கையர்களின் நிலமை என்ன…?

இஸ்ரேல் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை பிரஜைகள் எவருக்கும் காயங்களோ உயிரிழப்புகளோ பதிவாகவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக தூதுவர் தெரிவித்துள்ளார். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களின் மத்தியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஈரானால் ஆதரிக்கப்படும்...

ஈரான் இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது!

இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட்டின் தலைமையகத்தின் மீது அல்லது அதற்கு அருகில் பல ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளதையும் நெவட்டிம் விமானப்படைதளம்,டெல் நொவ் விமானப்படை தளம் ஆகியவையும் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளதையும் வீடியோக்கள் வெளிப்படுத்தியுள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது. இந்த இலக்குகளை ஈரான் தாக்கலாம் என அமெரிக்க இஸ்ரேல்  புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே  எதிர்பார்த்திருந்தனர். ஈரான் தனது மூன்று விமானப்படை...
- Advertisement -spot_img

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...
- Advertisement -spot_img