Friday, November 20, 2026
No menu items!

உள்ளூராட்சி மன்ற தேர்தல்

இன்று கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடத் தேர்தல் ஆணைக்குழு இன்று (27) காலை கூடுகிறது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும் அதற்கான ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்து இன்று கலந்துரையாடப்படும் என்று ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகிறது. அதன்படி, ஆணைக்குழு அதிகாரிகளும் இன்று கூட உள்ளனர்.

ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள இலங்கை தமிழரசு கட்சி!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் எவ்வாறு நிர்வாகத்தை ஏற்படுத்துவது என்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தலைவர் இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்...

உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் திட்டமிடுவது தொடர்பில் கலந்துரையாடல்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் திட்டமிடுவது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்தனர். வரவு செலவு திட்ட விவாதத்தின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளுக்கு இடையூறு இல்லாமல் நிறைவேற்ற அனுமதிக்கும் வகையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்குமாறு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் ஆணைக்குழுவை வலியுறுத்தினர். அரசாங்கம் அதன்...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் தொடர்பான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு..!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) நாடாளுமன்றில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பொது நிர்வாக அமைச்சில் நேற்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலத்தை கடந்த ஜனவரி 9ஆம் திகதி...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – மனுக்கள் மீதான விசாரணை நிறைவு..!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை முடிவுறுத்தியுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதற்கமைய, உயர்நீதிமன்றின் இரகசிய வியாக்கியானம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகருக்கு அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற விசாரணையை நிறைவு செய்து உயர் நீதிமன்றம் இந்த...

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று..!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்றையதினம் நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, கட்சிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு, உள்ளூராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணியிட இருக்கும் 5 கட்சிகள்..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா - கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும்,...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!

தமிழரசுக்கட்சி சார்பாக  கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இளைஞர்கள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img