Monday, June 15, 2026
No menu items!

ஊர்காவற்துறை

யாழ்ப்பாணத்தில் இரு சோகச் சம்பவங்கள் – ரயில் விபத்தில் பெண் உயிரிழப்பு, பேருந்து மோதி மீன்வியாபாரி பலி!

சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் ஒருவர் தவறி விழுந்து நேற்று (16) உயிரிழந்தார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் சாவகச்சேரி–சங்கத்தானை நிலையத்தை அடைந்தபோது, அந்தப் பெண் இறங்க முயன்றுள்ளார். அவர் இருந்த பெட்டியில் இறங்கும் தளம் இல்லாததால், வேறு பெட்டியின் வழியாக இறங்க முயன்றபோது ரயில் நகரத்...

ஒன்லைன் நிதி மோசடியின் உச்சம் – குவியும் முறைப்பாடுகள்..!

அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒன்லைன் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றது. இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிதி மோசடிகள் ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம் நான்கு இடம்பெற்றுள்ள நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்த ஒன்லைன் மோசடிகள் பல்வேறு வகையில் இடம்பெற்று வருகின்றன. நிகழ்நிலை செயலி (online...

யாழ் மாவட்டத்தில் தொடரும் சீரற்ற வானிலை நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இதன்படி சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் 111 குடும்பங்களைச்...

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் கைது!

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 80 இலட்சம் ரூபாவை மோசடி செய்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில்...

கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை…!

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைநகரை சேர்ந்த 74 வயதுடையரே  காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து கடற்தொழிலுக்காக நேற்று (17)  காலை சென்றவர் மாலை வரையில் வீடு திரும்பாத நிலையில் வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அரியநேத்திரனை ஆதரித்து இன்று யாழில் பிரசார நடவடிக்கை!

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரித்து இன்று யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை - தம்பாட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் செய்து தேங்காய் உடைக்கப்பட்டது. தொடர்ந்து ஆலய பிரத குரு அவர்களுக்கு...

கிளிநொச்சி இரத்தினபுரத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்ட தொழிலாளர் சடலமாக மீட்பு !

கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கட்டிடவேலையில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேல் மாடி கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் நேற்று இரவு இருவர் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் ஒருவர் நித்திரைக்கு சென்றிருந்தார். மற்றவர் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் அதிகாலை எழுந்து மற்றவரை காணாது தேடியபோது சடலமாக கீழே காணப்பட்டார் என...

சடலமாக மீட்கப்பட்ட கட்டட தொழிலாளர்…!

கிளிநொச்சி - இரத்தினபுரம் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேல் மாடி கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் நேற்று இரவு இருவர் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் ஒருவர் நித்திரைக்கு சென்றிருந்துள்ளார். மற்றவர் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் அதிகாலை எழுந்து மற்றவரை காணாமல்  தேடிய போது சடலமாக...

காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை உயிரிழப்பு!

யாழில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை பரிதாபமாக உயரிழந்துள்ளது. தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை 21ஆம் திகதி இரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளது. காய்ச்சல்...

 புங்குடுதீவில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு …!

யாழ் புங்குடுதீவில்  உள்ள ஆலயத்தில் கட்டடம் அமைப்பதற்காக  தோண்டப்பட்ட குழியில் இருந்து  மனித எலும்புக்கூடு மீட்கப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில்  நேற்றையதினம்(18) அங்கு கட்டடம் அமைப்பதற்காக குழி தோண்டியவேளை குழிக்குள் இருந்து மனித எலும்புக்கூடு  கண்டெடுக்கப்பட்டதுடன், இது தொடர்பில் அப்பகுதி கிராமசேவகருக்கு தகவல் வழங்கப்பட்டதோடு, ஊர்காவற்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. கடந்த 1985 ...
- Advertisement -spot_img

Latest News

அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தம் ‘கையெழுத்தானது’: ட்ரம்ப் 

 நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல்...
- Advertisement -spot_img