Tuesday, November 10, 2026
No menu items!

எதிர்க்கட்சித் தலைவர்

SJB-UNPகட்சிகள் இரண்டு முக்கிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை!

எதிர்வரும் உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான இரண்டு முக்கிய வழிமுறைகள் குறித்து உடன்பாட்டை எட்டுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் கவனம் செலுத்தியுள்ளன. சில உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாகப் போட்டியிடுவதற்கும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்காகத் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றும்போது ஒன்றிணைவது எனவும் இதன்போது யோசனை முன்மொழியப்பட்டதாகப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும்...

சுதந்திரதின வாழ்த்துச்செய்தியை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் !

அதிகாரத்தைப் பெறுவதற்கான குறுகிய நோக்கங்களுடன் இந்த வெற்றிகளை மறைத்த அரசியல் மாயைகள் காரணமாக இன்று நாடு எதிர்கொள்ளும் கடுமையான சவால்களை விமர்சன ரீதியாக ஆராய்வது, நாம் பெற்ற சுதந்திரத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்க உதவும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பழைய பிரச்சினைகளுக்குப் பழைய தீர்வுகள் அல்ல, புதிய தீர்வுகளை வழங்கி, சுதந்திரத்திற்குப் பின்னர்...

நெல்லுக்கான உத்தரவாத விலை எங்கே? –  சஜித் கேள்வி..!

நெல் அறுவடை பணிகள் ஆரம்பமாகிவிட்ட போதிலும் அரசாங்கத்தினால் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்க முடியாது போயுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நெல் அறுவடை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் இன்னமும் உத்தரவாத விலையை வழங்கப்படவில்லை. 3 இலட்சம் மெற்றிக் டொன் நெல் கொள்வனவுக்கு திறைசேரி 5 பில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளதாக அறியமுடிகிறது. இருந்த போதிலும் நெல்...

கொள்கலன் பிரச்சனை பற்றி இந்த அரசாங்கத்திற்கு எந்த அறிவும் இல்லை – எதிர்க்கட்சி தலைவர் சஜித்

கன்டெய்னர் அனுமதி தவறியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அரசு, சுங்கத்துறை தொழிற்சங்கங்களின் அறிவுறுத்தலின்படி, 80% இறக்குமதி கண்டெய்னர்கள், சிகப்பு லேபிளிடப்பட்ட கண்டெய்னர்கள் கூட, இடைவிடாமல் விடுவிக்கப்பட்டன. இந்த கொள்கலன்களின் உள்ளடக்கம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. இந்த வேளையில் அரசாங்கம் இந்த கொள்கலன்களுக்கு பொறுப்பேற்று விடுவிப்பதாக கூறுவதாகவும், இந்த கொள்கலன்களில் சட்டப்பூர்வ...

சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்த பிமல் ரத்நாயக்க!

ஊழல்வாதிகளை அரசாங்கம் பாதுகாப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அரசாங்கத்திற்கு எதிராக உறுதியான ஆதாரங்களை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுத்துள்ளார். “ராஜபக்ஷக்கள் கைது செய்யப்படும்போது சஜித் தான் முறைப்பாடு செய்கிறார். யோஷித ராஜபக்சவைக் கைது செய்த போது, ​​ஹர்ஷன ராஜகருணா மிகவும் காயப்பட்டதாகத் தோன்றியது” என்று ரத்நாயக்க கூறியதுடன், அவர்...

இலங்கைக்கும் UKக்கும் இடையே வலுவான உறவை மேம்படுத்தல் அவசியம்; சஜித்!

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் (UK) இடையே வலுவான உறவுகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற இங்கிலாந்து-இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், சட்டமியற்றும் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வளர்ப்பதில் புத்துயிர்...

UNP யுடன் SJB இன் இரண்டாவது பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது!

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இரு கட்சிகளின் பொதுச் செயலாளர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல்...

மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டிய சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டின் பல்வேறு துறைகளில் உள்ள தனிநபர்கள் எதிர்கொள்ளும் பல சவால்களை எடுத்துக்காட்டி, இந்த அழுத்தமான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை கோரினார். 33% மின்சாரக் கட்டணக் குறைப்பு வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் மின்சார கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என பொறுப்பு...

அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்திய சஜித்!

மக்களின் நலனுக்கான ஆட்சியை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துக்கு போதிய தெளிவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குருநாகல், கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விவசாயிகளுக்கான 25,000 ரூபாய் உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை. இன்னும் இதற்காக...

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்!  

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்குமிடையே  சந்திப்பு கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் நடந்துள்ளது. இதன்போது  இரு தரப்பினருக்குமிடையே பல பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டான. அங்கு, இந்திய அரசாங்கம் அதன் நெருங்கிய அண்மை நாடான...
- Advertisement -spot_img

Latest News

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த உலகளாவிய ஒளிபரப்பு நிறுவனங்கள் ஆர்வம்

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு தமது பிராந்திய ஊடக வலையமைப்புகள் ஊடாக ஆதரவளிக்க முன்னணி சர்வதேச ஒளிபரப்பு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர்...
- Advertisement -spot_img