Monday, July 27, 2026
No menu items!

எலிக்காய்ச்சல்

யாழில் எலிக்காய்ச்சலால் மற்றுமொரு உயிர் பறிபோனது..!

யாழில் எலிக்காய்ச்சல் நோய் என சந்தேகிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் நேற்று (14.12.2024) உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞனே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 5 நாள் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டு உடனடியாக அன்றைய தினமே நோயின் தீவிர நிலை உணரப்பட்டு யாழ்....

தீவிரமடையும் எலிக்காய்ச்சல் – 58 பேர் பாதிப்பு..!

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (13.12.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58...

யாழில் பரவும் மர்ம காய்ச்சல் – வெளியானது அதிர்ச்சி தகவல்..!

யாழ்.மாவட்டத்தில் இருவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், குறித்த நோய் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஆ.கேதீஸ்வரன் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்..!

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையுடன் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, காலி, களுத்துறை, அம்பாறை, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டில் சுமார் பத்தாயிரம் எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 120...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்..!

வெள்ள அனர்த்தத்தின் பின்பு எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து, மக்கள் விழிப்பாக செயற்படுமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடந்த ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அண்மை நாட்களாக இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால்  பெருமளவானோர் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்தனர். இவர்கள் வெள்ள நீரில் பயணம் செய்திருந்தனர். வெள்ளநீர்...

டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம்..!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம்  அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளனர். வெள்ள நீர் தணிந்ததன் பின்னர் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக ஆரோக்கியம் தொடரை்பான விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார். வயல்வெளிகளில் பணிபுரிபவர்கள் மற்றும்...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!

நாட்டில் இந்த வருடம் இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். சப்ரகமுவ மாகாண சபை வளாகத்தில் நடைபெற்ற எலிக்காய்ச்சல் தடுப்பு அறிவிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இரத்தினபுரி மாவட்டத்தில் 1,882 பேர்...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்…!

பொதுமக்களிடையே எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக, சுகாதாரத்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. எலிகளின் சிறுநீரால் நீர் மாசுபடுவதுடன், எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் காயங்கள் ஊடாக உடலினுள் செல்லலாம் எனவும், சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக, காயங்கள் உள்ள நபர்கள் தண்ணீருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறு, சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பெண்கள் மத்தியில் எலிக்காய்ச்சல் குறித்து எச்சரிக்கை

பொதுவாக எலிக்காய்ச்சல் என குறிப்பிடப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இலங்கை சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். தொற்றுநோயியல் பிரிவின் ஆலோசகர் மருத்துவ கலாநிதி துசானி டபரேரா  இது தொடர்பில் தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்தவகையில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 9,000 நோய்த்தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டில் இதுவரை 5,000 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இந்த தொற்றுக்களில் பெரும்பாலானவை...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img